“பயப்படுறீங்களா குமாரு!?” நழுவிப்போகும் கூட்டணிக்கட்சிகள்..! இழுத்துப் பிடிக்கும் ஸ்டாலின்!!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கூட்டணி விவகாரங்கள் கடைசி வரை ஒரு முடிவுக்கு வராது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு கட்சிகளும் ஒரு கூட்டணி கணக்கை போடுகின்றன, ஆனால் சூழ்நிலைகளும் மற்ற புற காரணிகளும் அதை அனுமதிப்பதில்லை.
அதற்கு ஒரு மிகச்சரியான எடுத்துக்காட்டுதான் எடப்பாடி!! விஜயின் திடீர் அரசியல் பிரவேசம் திமுக -விற்கு பாதகமாக அமைந்தாலும் ஏதோ சில காரணங்களால் அதிமுக -விற்கு சாதகம்தான். பல தோல்விகளை கண்ட எடப்பாடி இம்முறை ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற விஜயுடன் கூட்டணி வைக்கவே விரும்பினார். ஆனால் அமித்ஷா அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
எடப்பாடியும் வேறு வழி இல்லாமல் இந்த கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார்.
திமுக -வின் நிலை சற்று மாறானது. திமுக -வினர் இடதுசாரி கொள்கைகளுடன் நிலைத்து நிற்கும் கட்சிகளுடனும் இயக்கங்களுடனும் கூட்டணி வைத்துள்ளனர்.கடந்த மூன்று தேர்தல்களாக இவர்களின் வெற்றிக்கூட்டணி தொடர்கிறது.
திமுக கூட்டணியில் சலசலப்பு!!
திமுக கடந்த 2019 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த கூட்டணி தற்போது வரை தொடர்ந்து வருகிறது. திமுக கூட்டணியில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் தான் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட காட்சிகள் கடந்த முறை தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட இந்த முறை கூடுதலாக இடங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார்கள். ஒரு சில வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்றால் அதற்கு மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி வரவில்லாதது மட்டுமே தான் காரணம் என்றும் திமுக தெரிவித்து வருகிறது. ஏற்கனவே சில காலமாக திமுக -விற்கு எதிரான கருத்துக்களையே கூறிவருகிறது சி.பி.எம். இந்த நிலையில் சண்முகம் அவர்கள் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில்
“2026 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் இணைந்தால் தேர்தல் களம் கடும் போட்டியாக மாறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இந்த முறை அதிக தொகுதிகளை கோரும் என தெரிவித்துள்ள சண்முகம் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு மாநில முதலாளித்துவக் கட்சியாக திமுகவை சிபிஎம் கருதுகிறது, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலத்திலிருந்தே இந்தக் கருத்தை சிபிஎம் கொண்டுள்ளோம். திமுகவின் முக்கிய குணம் மாறவில்லை. இதன் மூலம் கம்ம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக மீதான தங்கள் வருத்தத்தை காண முடியும்.
திருமாவை இழிவுபடுத்துகிறதா திமுக!?
கூட்டணி கட்சி என்றுதான் பெயர். ஆனால் ஆளும் திமுக திருமாவளவனை மோசமாக நடத்துவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ‘பாசிச பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளிக்காக அவர் பலவற்றையும் சகித்துக்கொண்டுள்ளார் என கட்சியினர் வருத்தம் தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் விசிக சார்பில் மதச்சார்பற்ற பேரணி ஒன்றை நடத்தினர், ஆனால் அதை நடத்த திருமாவுக்கு பல பிரச்சனைகளை கொடுத்தாக திருமாவே மேடையில் பேசினார் திருமா.
பாமக வில் ஏற்கனவே ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் தந்தை -மகன் கோஷ்டி மோதல் தற்போது புதிய உச்சகட்டத்தை எட்டிவிட்டதாக தெரிகிறது. ஒன்றுபட்ட பாமக என்றில்லாமல், ராமதாஸ் பாமக அன்புமணி பாமக என்று பிரிந்தால் ராமதாஸ் நிச்சயம் திமுக -உடன் சேர முயற்சிப்பார். அந்த சூழலை திமுக எப்படி கையாளும் என்பது மிகப்பெரிய ஒரு கேள்வியாக உள்ளது. என்ன ஆனாலும் பாஜக, பாமக இருக்கும் கட்சியில் விசிக இருக்காது என உறுதிபட கூறியுள்ளார். தற்போது திருமாவை ஸ்டாலின் எப்படி சமாளிக்கப்போகிறார் என்ற மிகப்பெரும் கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை ராமதாஸ் பாமக தானே நீங்கள் கூட்டணியில் இருங்கள் என ஸ்டாலின் கேட்க கூட வாய்ப்புண்டு என்று சொல்லபடுகிறது. ஆனால் இது விசிக வுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக அமையும்.
இந்த சூழலில்தான், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கியூபா ஒருமைப்பாட்டு தேசிய குழு மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக "சோசியலிச கியூபாவை காப்போம்", "ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம்" மற்றும் "ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டை கொண்டாடுவோம், ஆகிய தலைப்புகளில் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
“என்னுள் பாதியாக இருக்கும் செங்கொடி தோழர்களை அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கிறேன். இதை நான் ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால், நமக்குள் இருக்கும் தோழமை என்பது அரசியல் லாபத்திற்காக அல்ல தேர்தல் லாபத்திற்காக அல்ல. நமக்குள் இருப்பது கொள்கை நட்பு, கோட்பாடு நட்பு, லட்சிய நட்பு இதுதான் பலருக்கும் கண்ணை உறுத்துகிறது” என பேசியுள்ளார். இது ஒரு அரசியல் நகர்வுதான், தன்னுடன் இருக்கும் பலமான கூட்டாளிகள் அதிருப்தியில் இருக்கும்போது இப்படி வார்த்தையால் அன்பை பொழிவது இயல்புதான், தூய்மை பணியாளர் போராட்டம் நடக்கிறது, மாநிலம் முழுக்க சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது, சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன, முதல்வருக்கு நன்றாக தெரியும் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று எனவே அவர் எப்படி பேசித்தான் எதையாவது செய்யமுடியும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்!!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.