காந்தி படங்கள் போல தான்.... அம்பேத்கர் படங்களும் இருக்கும்...!

காந்தி படங்கள் போல தான்....  அம்பேத்கர் படங்களும் இருக்கும்...!
Published on
Updated on
1 min read

அம்பேத்கர் என்ற பெயரின் காரணத்திற்கு பல கதைகள் திரித்துக் கூறப்பட்டுள்ளது என விசிக தலைவர்  திருமாவளவன் கூறியுள்ளார். 

மேலும் 'ஏ' படம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 

காந்தி படங்கள் போல தான்....  அம்பேத்கர் படங்களும் இருக்கும்...

"இந்த படத்தின் முன்னோட்ட காட்சியை நாம் அனைவரும் பார்த்தோம். பல இடங்களில் பல திரைப்படங்களில் காந்தி படங்கள் இருப்பது போல், அம்பேத்கரின் படங்களும் இருக்கும். அதில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்  சார்ந்தவர்கள்   என்பதைக்  காட்டுவதற்காக அம்பேத்கரின் படங்கள் அந்தந்த வீடுகளில் வைக்கப்பட்டிருக்கிறது . அவர் ஒரு சமுதாய பிரிவை சார்ந்தவர்களுக்கு மட்டும்தலைவர் அல்ல' என்றார். 

தொடர்ந்து,   'ஒரு நபரை பற்றி விமர்சன படுத்தாமல், ஒரு கருத்தியலை பற்றி விவாதிக்கும் போது அதனால் மோதல்கள் வராது'  என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறிய கருத்திற்கு இவ்விளக்கமளித்து பேசிய அவர்,   

"ஒரு நபரை பற்றி விமர்சன படுத்தாமல், ஒரு கருத்தியலை பற்றி விவாதிக்கும் போது அதனால் மோதல்கள் வராது'  என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். ஆனால் சமீப காலமாகவே கருத்தியல் மோதல்கள் தான் அதிகம் நடக்கிறது.. வரலாறு பதிவான காலத்திலிருந்து கருத்தியல் இடையே நடக்கும் யுத்தம் தான் நடந்து வருகிறது.

'மனித நேயத்தைப்  போற்றுவோம்..! , அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்போம்..!, அமைதி வேண்டும்...!  என்று சொல்லுவது தான் இடது சாரி அரசியல். இடது சாரி அரசியலின் நோக்கமே அமைதி காண்பது தான்." என்று கூறினார். 

மேலும் பேசிய அவர்,  "பிஜேபி எங்களுக்கு பகை கட்சி கிடையாது, எங்களுக்கு சாதி பகை கிடையாது , ஒரு தனி மனித பகையம்  கிடையாது. ஆனால், 'ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல்'- இது மூன்றும்  தான் மனித குலத்தின் பகை. இந்த மூன்று தான் வெவ்வேறு வடிவங்களில் பகைமைகளாக சுற்றி வருகிறது. வலுவுள்ளவர்கள் ஆதிக்கம் செய்வார்கள், வல்லவன் வகுத்தது நீதி என்று சொல்வது  தவறு என  உணரும் காலம் 'மனிதம்' என்று உணரும் போது தான் வரும் " எனவும் கூறினார். 

என்னை பார்த்ததும் அண்ணா என்று கூப்பிடத்  தோன்றுகிறது என்று சொன்னார்கள். அதுதான் அம்பேத்கரின் எண்ணம் என்றும் அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com