"அமைகிறது 3-வது அணி” விஜயுடன் இணைகிறாரா அன்புமணி!? - குமுறும் அமிட்ஷா!

ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இது கந்தர் மலையா? இல்லை சிக்கந்தர் மலையா? என்ற சிக்கலை எழுப்பினார்கள். ஆனால்..
pmk and tvk allaince is likely going to happen
pmk and tvk allaince is likely going to happen
Published on
Updated on
2 min read

2026 தேர்தல்உண்மையில் இன்னும் 10 மாதங்களுக்கு தமிழ் நாடு அல்லோலப்படும் என்பதில் ஐயமில்லை. திமுக தனது கூட்டணி குறித்து மிகத்தெளிவானை போக்கை கொண்டுள்ளது. ஆனால் அதிமுக -வில் இன்னும் அந்த நிலையற்ற தன்மை தொடர்கிறது. 

அமித்ஷா -வின் வருகை 

தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருகிறார். குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த அமித் ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இந்நிலையில், நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழ்நாடு வர இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் வரும் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மதுரையை குறிவைக்கும் பாஜக 

பாஜக -வின் அரசியல் கோட்டபாடே மதவாத பிரிவினை கொள்கை தான். ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இது கந்தர் மலையா? இல்லை சிக்கந்தர் மலையா என்ற சிக்கலை எழுப்பினார்கள். ஆனால் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. ஆகவே தென் மாவட்டங்களுக்கு சென்று அங்கு மீண்டும் இதுபோன்றோரு பிரச்னையை கிளப்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனேவே வந்தபோது பாஜக -அதிமுக கூட்டணி அமைந்தது தற்போது கூட்டணியை மேலும் வலுப்படுத்த தவெக, பாமக, தேமுதிக ஆகிய காட்சிகளை இந்த கூட்டணியில் இணைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக -பாஜக கூட்டணி!

விஜய் -ன் அரசியல் பிரவேசம் தமிழ்நாடு அரசியல் களத்தில் உண்மையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும். பெரும்பான்மை இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள தவெக பகிரங்கமாக திமுக -வை சாடி வருகிறது.

“எதிரிக்கு எதிரி நண்பன்" என்பது போல விஜயுடன் கூட்டணி வைக்கவே எடப்பாடி விரும்பினார். ஆனால் விஜய் இதற்கு இசைந்து கொடுப்பதாக தெரியவில்லை எனவே வேறு வழி இல்லாமல் பாஜக -வுடன் கூட்டணி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணிக்கான விலைதான்  “அண்ணாமலை பதவி விலகளுக்கு” காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் எதுவுமே இல்லாத பாஜக -விற்கு அதிமுக -வின் கூட்டணி கிடைத்ததே பெரும் லாபம் தான்.  

ஆனால் களத்தில் தேர்தல் வேலைகளை இன்னும் முடுக்கி விடாமல் இருக்கிறது அதிமுக. காரணம் பாஜக -வின் திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் கொள்கைக்கு எதிர்க்க இருப்பதால் அதை வைத்து வாக்கு சேகரிக்க முடியாது என எதிபாடிக்கு நன்றாக தெரியும் அதனால்தான் இன்னமும் அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

குருமூர்த்தியின் பேச்சு வார்த்தை?

இதற்கிடையில் தந்தை உடனான சச்சரவை சரி செய்ய அன்புமணியே இறங்கிவந்துள்ளார். அன்புமணி வந்துபோன 15 நிமிடங்களில் பாஜகவின் குருமூர்த்தியும் அதிமுக -வின் சைதை துரை சாமியும் ராமதாஸை சந்தித்துவிட்டு சென்றனர். இந்நிலையில்தான் இந்த கூட்டணியை உறுதி என்ற சொல்லப்பட்டு வந்த நிலையில் திடீர் திருப்பமாக தவெக, பாமக, தேமுதிக மற்ற குட்டிக்கட்சிகள் இணையவுள்ளதாக வாய்ப்பு என புது தகவல்கள் வெளியாகி உள்ளது.

இனி என்ன நடக்கும் 

ஒருவேளை தவெக, பாமக, தேமுதிக இணைந்தால் அது மிகப்பெரும் அரசியல் மாற்றம்தான். ஆனால் அது மிக கடுமையான விளைவுகளை அதிமுக -  திமுக -விற்கு ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மேலும் இந்த மூன்றாவது கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக பல விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com