
கடந்த சில நாட்களாகவே பாமகவிற்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார்.
இது பாமக -வில் பெரும் பதட்டத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே எத்தனையோ கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை
கடந்த 2024 -ஆம் ஆண்டு ராமதாஸின் மகள் வயிற்று பேரன் முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மேடையிலேயே அன்புமணி காட்டமாக பேசியிருந்தார். இதுதான் கட்சியின் பிரச்சனைக்கு துவக்கப்புள்ளி. அப்போது தொடங்கிய தந்தை - மகன் பூசல் இதுநாள் வரை நீடிக்கிறது. மேலும் ராமதாஸ் கட்சியிலிருந்து விலக்கும் நிர்வாகிகளை எல்லாம் அன்புமணி மறு நியமனம் செய்து வருகிறார். இதனால் தொண்டர்களும் நிர்வாகிகளும் குழப்பத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் ஓமந்தூரார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்புமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவன தலைவருக்கு கட்டுப்படாமல் அன்புமணி செயல்படுவது கண்டிக்கத்தக்கது என பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல மாதங்களாக தந்தை மகனின் கோஷ்டி மோதல் வலுத்து வரும் நிலையில் தமிழா தமிழா பாண்டியன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார், “அன்புமணி நம்பிக்கையான நபர் அல்ல என்ற எண்ணம் எப்போது அவர் பாஜக உடன் சென்றாரோ அப்போதே எடப்பாடிக்கு போய்விட்டது, அதனால்தான் நீங்கள் போய் உங்கள் தந்தையை அழைத்து வாருங்கள் கூட்டணி குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம் என அனுப்பி வைத்துவிட்டார், ராமதாஸ் கூறியது போல பாஜக கூட்டணிக்கு தூண்டியது சவுமியா அன்புமணி தான், பல ஆயிரம் கணக்கான சொத்துக்களை அன்புமணி குடும்பம் அமெரிக்காவில் பதுக்கி வைத்துள்ளது. இவர்கள் பாஜக -வை விட்டு கழன்றுகொண்டால் அமலாக்கத்துறை பாய்ந்துவிடும், எனவேதான் அன்புமணி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார், அமித்ஷாவோ எடப்பாடி சொல்லுவதுதான் கூட்டணி என சொல்லி அனுப்பிவிட்டார், தேர்தல் ஆணையம் சென்று முறையிட்டார் அவர்களும், நிறுவனரிடமே அனுப்பிவிட்டனர், எனவே அன்புமணிக்கு வேற வேழியே இல்லை” எனக்கூறியுள்ளார் பாண்டியன்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.