
சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சினேகா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி 16 வயதில் மகள் உள்ள நிலையில் தனது கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகாரளித்துள்ளார். மருத்துவமனைக்கு வந்த போலீசார் இது குறித்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் சிறுமிக்கு “அவரது உறவினரான பிரசாந்த் என்ற 26 வயது இளைஞர் சிறுமியுடன் ஸ்னாப் ஷாட் மூலம் பழகி வந்துள்ளார். அவர் துபாய் இருப்பதாக பொய் சொல்லி சிறுமியை ஏமாற்றி வந்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் சென்னைக்கு வந்துள்ளதாக கூறி சிறுமியை நேரில் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். நேரில் பார்க்க வந்த சிறுமியை மணலியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது போல் அவ்வப்போது சிறுமியுடன் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதே போல் ஓட்டேரி வடமலை தெருவை சேர்ந்த லியோ என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு பழகி வந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் பிரசாந்தை அழைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர். அதே போல் லியோவை தேடி வந்த நிலையில் அவர் ஏற்கனவே வேப்பேரி போலீசால் கைது செய்யப்பட்டு ஒரு குற்ற வழக்கில் சிறையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் சிறுமிக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிறுமியை போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஆசிரியரின் மகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.