``'ஆந்திரா ரெட்டி கேங்கோடு' சேர்ந்து சினிமா நடிப்புக்கு தயாராகுங்கள் CM sir" MLA-கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய அப்பாவு!

இத்தனை குற்றங்களுக்கும் முதல்வரும், தமிழக காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றிய ஆட்சியை பாராட்டாமல் இருக்க முடியுமா ? அதற்காக தான் இன்று சென்னையிலே மேற்படி சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடத்த போகிறீர்களா CM sir ?
"Join the Andhra Reddy Gang and Get Ready for Cinema Acting, CM Sir!" - Oppukau Blasts MLAs Over Allegations
``'ஆந்திரா ரெட்டி கேங்கோடு' சேர்ந்து சினிமா நடிப்புக்கு தயாராகுங்கள் CM sir" MLA-கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய அப்பாவு!
Published on: 
Updated on: 
2 min read

தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. சமீப காலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் சூழலில் முதலமைச்சர் - MLAகள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகம் MLAகள் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கி விமர்சித்துள்ளார் திமுக முன்னாள் சபாநாயகர் அப்பாவு.

அவரது பதிவில், "சோபா மூலம் வசியப்படுத்திய #கல்லாப்பட்டி கட்சிகளின் துணையோடு ஆறு மாதம் காலம் ஆட்சியை தள்ளியுள்ள நிலையில் தமிழ்நாடு போதைப்பொருள் உற்பத்தி விற்பனை, பாலியல் சீண்டல், கொலை, கொள்ளை, குழந்தைகள் கடத்தல், அடிதடி, மாமுல் வேட்டைகளில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்திற்கு #முதலிடம் பெற்றுக் கொடுத்த தவெக ஆட்சியின் லட்சனத்தை யாரும் மறுக்க முடியுமா CM sir ?

உங்கள் ஆட்சி பொறுப்பெற்ற நாள் முதல் பொது வெளியில் போதைப்பொருள் நொறுக்கிய #கில்லிசரத் அமைச்சர், தவெக நிர்வாகியை ஜட்டியோடு விட்டு அடித்து கொன்று விடுவேன் என்ற #ஜகதீஸ்வரி அமைச்சர், பாலம் கட்ட 3 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டிய அமைச்சர் #கீர்த்தனாவின் உறவினர், அரசு வழக்கறிஞர் பணிக்கு ரூபாய் 15 லட்சம் அமைச்சர் #புஸ்ஸிஆனந்திடம் கொடுத்து ஏமாந்து நீதிமன்றம் சென்ற தவெக நிர்வாகி, கவுன்சிலர் பதவிக்கு தவெக நிர்வாகிகளிடம் பல லட்சம் கேட்ட மதுரை #முஸ்தபா MLA வின் ஆடியோ , குடிநீர் பிரச்சினைக்கு மனு கொடுக்க வந்தவரை மது போதையில் கொலை வெறி தாக்குதல் நடத்திய துணை சபாநாயகர் #ரவிசங்கர், கள்ளக்குறிச்சி MLA #அருள்விக்னேஷ் மது போதையில் ஆட்சியர் அலுவலகம் சென்று பாலியில் அலம்பல் குறுஞ்செய்தி மூலம் பாலியல் சீண்டல், வேலை கேட்டு வந்த தவெக பெண்மணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஶ்ரீவைகுண்டம் #சரவணன் MLA , நாகை தவெக மாவட்ட நிர்வாகி #பூபாலன் ரூபாய் 1000 கோடிக்கு மெத்தம்பெட்டமைன் தயாரித்து வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி இத்தனை குற்றங்களுக்கும் முதல்வரும், தமிழக காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றிய ஆட்சியை பாராட்டாமல் இருக்க முடியுமா ? அதற்காக தான் இன்று சென்னையிலே மேற்படி சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடத்த போகிறீர்களா CM sir ?

#ஜனநாயகன் படம் படுதோல்வி அடைந்ததை போல் உங்களது ஆறு மாத தேனிலவு ஆட்சி காலமும் படுதோல்வி அடைந்திருப்பதை உணர்ந்து இனியாவது நள்ளிரவு உத்தரவுகளை கைவிட்டு நாள்தோறும் காலையிலே கோட்டைக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து கோப்புகளை பார்த்து தெளிவான நிலையில் ஆட்சியை நடத்த முயற்சிப்பீர்களா ? முடியாது என்றால் பரந்தூர் விமான நிலையம், குரியன் ஜோசப் குழுவை கலைத்தது போல் உங்கள் ஆட்சியையும் #கலைத்துவிட்டு

“ஆந்திரா ரெட்டி கேங்கோடு” சேர்ந்து நீங்கள் ஏற்கனவே செய்து வந்த #சினிமா தயாரிப்பு மற்றும் நடிப்புக்கு தயாராகுங்கள் CM sir?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

"Join the Andhra Reddy Gang and Get Ready for Cinema Acting, CM Sir!" - Oppukau Blasts MLAs Over Allegations
`ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்' "தவெக MLA-வை கைது செய்ய முதல்வருக்கு பயமா.." - EPS வலியுறுத்தல்.. MLA அருள் விக்னேஷ் சொன்ன பதில் என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.