“தலையாட்டி பொம்மை போல முதலமைச்சர் இருக்கிறார்” - திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… ஸ்டாலினை சாடிய அண்ணாமலை!

இரண்டு சதவீதம் மட்டும் தான் நக்சலை ஒழிக்க வேண்டிய நிலை இருக்கிறது அதையும் விரைவில் ஒழிப்பார்...
“தலையாட்டி பொம்மை போல முதலமைச்சர்  இருக்கிறார்” - திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… ஸ்டாலினை சாடிய அண்ணாமலை!
Published on
Updated on
2 min read

2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்களது பிரச்சார பயணங்களை தொடங்கி மக்களிடையே உரையாற்றி வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இந்த பிரச்சார பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் தற்போது புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்ணாமலை போன்ற பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்குபெற்று வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “முதலமைச்சர் மு க ஸ்டாலினை விட அதிகமாக தமிழ்நாட்டில் பல இடத்திற்கு அமித்ஷா சென்றுள்ளார். அவர் ஒரு தீர்மானம் எடுத்த 2026 ல் நக்சல் இல்லாத பாரதமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் படிப்படியாக அத செய்து 98 சதவீதம் நக்சல் இல்லாத பாரதமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் அமித்ஷா. இன்னும் இரண்டு சதவீதம் மட்டும் தான் நக்சலை ஒழிக்க வேண்டிய நிலை இருக்கிறது அதையும் விரைவில் ஒழிப்பார்.

பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் மூன்று மாத காலம் தமிழ்நாட்டில் இருந்து மக்களோடு மக்களாக பணி செய்வார்கள். அரசியலில் ஆழமாக பார்த்தவர்கள் எனக்கு முன்பு பேசியவர்கள் எல்லாம். திமுக ஆட்சியயை பற்றி எவ்வளவு அதை பற்றி பேசுவது ‘முழுக்க புளித்த தயிரில் சில துளி மோர் ஊற்றுவது’ போல தான் தான்.அனைத்து இடத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகிறார்கள். டீ கடையில் தொடங்கி ஆட்டோக்காரர்கள் வரை இந்த மாற்றத்தை தான் நயினார் நாகேந்திரன் அண்ணனின் இந்த யாத்திரையும் பிரதிபலிக்கிறது.

எதிர்க்கட்சி தலைவரும் நமது கூட்டணியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதுவரை 200 தொகுதிகளை கடந்து யாத்திரை சென்றுள்ளார். நாமும் அதே போல தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு யாத்திரை சென்றிருக்கிறோம். இன்னும் 90 நாட்கள் தான் இருக்கிறது. நிச்சயம் மாற்றம் ஏற்பட்டே தீரும். இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நம்மை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை இருக்கிறது.

தலையாட்டி பொம்மை போல முதலமைச்சர் அமர்ந்திருக்கிறார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் நான்கரை ஆண்டு காலம் கடத்திருக்கிறார் என்றால் அது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான். பொங்கலுக்கு 3000 ரூபாய் கொடுத்தால் மக்கள் வாக்களித்து விடுவார்களா? ஒரு ரேஷன் கார்டுக்கு 2021ம் ஆண்டு இரண்டு லட்சத்து நான்காயிரம் ரூபாய் கடன் இருந்தது. ஆனால் தற்போது ஒரு ரேஷன் அட்டையின் மீது நான்கு லட்சம் 54 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த அரசு ஒரு ரேஷன் அட்டையின் மீது இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கடனை அதிகரித்துள்ளது.” என திமுக அரசை சாடியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com