“கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் செந்தில் பாலாஜி தான்” - பாஜக பிரச்சார பயண நிறைவு கூட்டத்தில் நயினார் பகிரங்க குற்றச்சாட்டு!

குழந்தைக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெண்கள் ரோட்டில் நடமாட முடியவில்லை...
“கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் செந்தில் பாலாஜி தான்” - பாஜக பிரச்சார பயண நிறைவு கூட்டத்தில் நயினார் பகிரங்க குற்றச்சாட்டு!
Published on
Updated on
2 min read

2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சார பயணங்களை தொடங்கி மக்களிடையே உரையாற்றி வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இந்த பிரச்சார பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் தற்போது புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்ணாமலை போன்ற பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்குபெற்று வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் “இந்த யாத்திரையின் போது எங்கு எல்லா கிராமங்களுக்கும் எல்லா நகரங்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது, கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்களிடையே நேரடியாக உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதில் பல மக்களின் மன குமுறல்கள் எனது காதில் விழுந்தது. குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு சென்று இந்த ஆட்சியில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்புமாறு மக்கள் தெய்வத்தின் இடம் வேண்டி வருகின்றனர்.

மேலும் தமிழகத்தை காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா? என எதிர்பார்த்து ஏங்கி கொண்டிருக்கும் நேரத்தில் தான் நமது உள்துறை அமைச்சர் தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்து மாற்றத்தை நம் மக்களிடையே ஏற்படுத்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுகவின் ஆட்சி நாம் மட்டும் இல்லை உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் கண்ணீர் வடிக்கும் விதமாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் போதும் பயம், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர்கள் வருவார்களா என்று பயம் ஏனெனில் எங்கும் போதை பொருள் மயம். இது தான் திமுக ஆட்சியின் சுய நலம்.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், இந்த ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என்றால் மீதி இருக்கும் மூன்று மாதத்தில் நாம் அனைவரும் விரதம் இருப்பது போல திமுக அரசை எதிர்த்து நமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாலியல் வன்கொடுமைகள், குழந்தைக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெண்கள் ரோட்டில் நடமாட முடியவில்லை. எங்கு பார்த்தாலும் கொள்ளை கொலை. இதையெல்லாம் செய்வது திமுக கட்சியினர் பெண்களை மதிக்க தெரியாதவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர்.

கரூரில் ஒரு சம்பவம் நடைபெற்றது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் காலை 12 மணிக்கு வருவதாக சொல்லி தாமதமாக வந்தார் அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உடனே இரவோடு இரவாக முதலமைச்சர் கரூருக்கு வந்து நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஒரே இரவில் 41 பேர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது எல்லாம் எதற்கு கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்காக. 41 பேரின் சாவுக்கு காரணம் செந்தில் பாலாஜி தான் என்பதை இந்த மேடையில் நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றேன்.

இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் உண்டு இந்த தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைந்தவுடன் இதை எல்லாம் நீதிமன்றத்தின் மூலம் நாங்கள் அணுகுவோம். பழிக்கு வெளியில் போதை பொருள் விற்கப்படுகிறது மாணவர்கள் போதையில் ஆசிரியர்களை தாக்குகின்றனர். இது எல்லாம் ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நடக்கிறது” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com