
அதிமுக கட்சியை எம்ஜிஆர் தொடங்கியதில் இருந்து கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்தவர் ராமநாதபுரத்தை சேர்ந்த அன்வர் ராஜா. 1986 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இவர் மண்டபம் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார். பிறகு எம்ஜிஆர் உடன் தனிப்பட்ட முறையிலும் நல்ல நட்பில் இருந்துள்ளார் அன்வர் ராஜா. அதிமுகவில் அதிகாரம் வாய்ந்த குழுவில் இருந்த 15 உறுப்பினர்களில் அன்வர் ராஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 13 அமைச்சர்கள் இருந்த இந்த குழுவில் அமைச்சர் பதிவியில் இல்லாமல் உறுப்பினராக இருந்தவர்கள் ஜெயலலிதா மற்றும் அன்வர் ராஜா இருவர் மட்டுமே.
எம்ஜிஆர் இறந்த பிறகு இரண்டாக பிரிந்த அதிமுகவில் ஜானகி தலைமையில் 97 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் அன்வர் ராஜா ஜானகிக்கு ஆதரவு அளித்தார். பின்னர் 1989 ஆம் ஆண்டு ஜானகியும், ஜெயலலிதாவும் தனி தனி சின்னங்களுடன் தனியாக போட்டியிட்ட நிலையில் ஜெயலலிதாவின் குழு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இடம் பெற்றது. எனவே ஜானகி கட்சியில் இருந்து விலகிய நிலையில் அன்வர் ராஜ மீண்டும் ஜெயலலிதா அணியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினர். அதனை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சர் அவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
பின்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் பகுதியில் வெற்றி பெற்ற அன்வர் ராஜா. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலாவிற்கு ஆதரவாக நின்று எடப்பாடியை ஆதரித்தார். ஆனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததை தொடர்ந்து எதிர்த்து வந்த அன்வர் ராஜாவிற்கு 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க படவில்லை. இதனால் விரக்தியடைந்த அன்வர் ராஜா எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார், எனவே கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். பின்னர் 2023ஆம் ஆண்டு எடப்பிடியின் முன்னிலையில் கட்சியில் இணைத்தார்.
இதுவரை பலமுறை உட்கட்சி பிரச்சனைகளால் கட்சியை விட்டு விலகி இருந்தாலும் மற்ற எந்த கட்சிகளுடனும் இணையாத அன்வர் ராஜா இன்று திமுகவில் இணைய அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அன்வர் ராஜா அறிவாலயத்துக்கு சென்றவுடன் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து எடப்பாடி நீக்கினார். இதனை தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் அனைவர் ராஜா திமுகவில் இணைத்துள்ளார். பலமுறை காட்சியை விட்டு நீக்கப்பட்டாலும் வேறு கட்சியில் இணையாத அன்வர் ராஜ தற்போது திமுகவில் இணைத்துள்ளது அதிமுக தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா “பாஜகவுடன் கூட்டணி வைத்தது தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கட்சியை காப்பாற்ற நினைத்து பலமுறை எடுத்துரைத்தும் எடப்பாடி இதுகுறித்து கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். எனவே திமுகவுடன் கூட்டணி வைத்ததாகவும் அடுத்த தேர்தலில் திமுகவே வெற்றி அடையும் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்ப துரை “அன்வர் ராஜா இருட்டை தேடி செல்லும் வௌவால் போன்றவர்,அவர் திமுகவுடன் இணைவதற்கு கூட்டணி ஒரு காரணம் தான், அவரது உடல் மட்டுமே இப்போது திமுகவிடம் சென்றுள்ளது, உயிர் எப்போதோ இணைந்து விட்டது” என தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அன்வர் ராஜா மக்களால் கொண்டாடப்பட்டு ஆதரவளிக்கப்பட்ட நிலையில் இவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளது. அதிமுகவின் ஓட்டுக்களை குறைக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.