தமிழக காவல்துறை தலைவராக சங்கர் ஜிவால் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரின் பணிக்காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனையடுத்து, சென்னை மாநகரா காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால், தமிழக காவல்துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஜிவால், 1990-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். மன்னார்குடியில் காவல்துறை உதவி ஆணையராக பணியை தொடங்கியவர் சங்கர் ஜிவால். உளவுப்பிரிவு டிஐஜி, ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் ஆவார்..
சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் பிறந்த சந்தீப் ராய் ரத்தோர், திண்டுக்கல், கோவை மாவட்ட காவல் ஆணையராக பதவி வகித்தவர். தமிழ்நாடு காவல்துறை தலைவராக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஷிவ் தாஸ் மீனா, தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.. 1989-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஊரக வளர்ச்சித்துறை, நில நிர்வாகம், போக்குவரத்து துறை என பல்வேறு துறைகளில் திறம்பட செயல்பட்டவர் ஷிவ் தாஸ் மீனா,என்பது குறிப்பிடதக்கது .