"அருள் விகனேஷ் உடனடியாக கைது.. அமைச்சர்கள் மீது நடவடிக்கை.. முதல்வர் விஜய்யின் அணுகுமுறை இழிவானது" - சீமான் வலியுறுத்தல்!

மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்?" - சீமான் கேள்வி
Seeman Demands Immediate Arrest of MLA Arul Vignesh; Criticizes CM Vijay
"அருள் விகனேஷ் உடனடியாக கைது.. அமைச்சர்கள் மீது நடவடிக்கை.. முதல்வர் விஜய்யின் அணுகுமுறை இழிவானது" - சீமான் வலியுறுத்தல்!AI Generated
Published on: 
Updated on: 
3 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியாருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

BNS 75 பாலியல் துன்புறுத்தல், BNS 78 பெண்ணைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல், BNS 79 பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் பேச்சு அல்லது செயல், BNS 132 அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், IT Act 67 இணையத்தில் ஆபாசமான உள்ளடக்கம் வெளியிடுதல், IT Act 67A பாலியல் வெளிப்படையான உள்ளடக்கம் வெளியிடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் BNS 75 ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அருள் விக்னேஷ் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..

"கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும்.

ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்?

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்?

கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்!

பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா?

தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது?

தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா?

ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா?

ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்." எனக் கூறியுள்ளார்.

Seeman Demands Immediate Arrest of MLA Arul Vignesh; Criticizes CM Vijay
``இந்தமுறை நடவடிக்கை 'கடுமையாக' இருக்கும்" -மதுரையின் இளம் ஆட்சியரை எச்சரித்த நீதிபதிகள்.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திருப்பம்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்