தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை தொடர்ந்து நடக்கிறது - கம்யூ முத்தரசன்

தாழ்த்தப்பட்ட மற்றும்  ஒடுக்கப்பட்ட மக்கள் மீது  வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக இந்திய கம்யூனினிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா. முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட  ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை தொடர்ந்து நடக்கிறது - கம்யூ முத்தரசன்
Published on
Updated on
1 min read

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தலித் மக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் பொதுச்செயலாளர் எம்.வீரபாண்டியன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வன்கொடுமைகள்

ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசிய முத்தரசன் பேசும்போது, 
நாட்டில் 20 கோடி மக்கள் இரவுப் பட்டினி இருப்பதாக புள்ளிவிபரம் தெரிவிப்பதாகவும்,  தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

படைத்த கடவுளை வணங்க உரிமை இல்லை எனவும் பழனி கோவில் கும்பாபிஷேகம் விழாவில் இடுப்பில் துண்டுடன் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்ட நிலையில் , அவர் கலந்துகொண்டதால் தீட்டு பட்டுவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக தெரிவிப்பதாகவும் முத்தரசன் தெரிவித்தார். 
மகாபாரத  கதையிலேயே ஆணவக் கொலைகள் தொடங்கிவிட்டதாகவும்.
ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கு விருந்து வைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி,
 ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்க மாட்டார் எனவும் குற்றம் சாட்டினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com