

ஏப்ரல் 23 தேதி நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 தேதி தொடங்கி, அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தற்போது பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடபட்டுள்ளது. அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் எல் முருகனுக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் தெற்கு தொகுதியின் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வானதி ஸ்ரீனிவாசனுக்கு கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின், தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த கே அண்ணாமலைக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாஜகவில் தான் அரசியல் பயணத்தை தொடக்கி தமிழகத்தில் பல்வேறு பிரசனைக்களுக்காக பாஜக சார்பில் குரல் கொடுத்தவர். மேலும் திமுக அரசை நோக்கி பல கேள்விகளையும் விமர்சனங்களையும் வைத்து அரசியல் களத்தில் தொடர்ந்து பயணித்தவர். தமிழகம் வரவிருக்கும் பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து அவரை பாஜகவில் இருந்து புறக்கணிப்பதாக தெரிகிறது.
மயிலாப்பூர் - தமிழிசை சௌந்தராஜன்
தளி - நாகேஷ் குமார்
மொடக்குறிச்சி - கிருத்திகா சிவகுமார்
உதகமண்டலம் - ஸ்ரீ போஜராஜன்
அவிநாசி - எல். முருகன்
திருப்பூர் (வடக்கு) - தங்கராஜ்
கோயம்புத்தூர் (வடக்கு) - வானதி ஸ்ரீனிவாசன்
கந்தர்வகோட்டை - உதய குமார்
புதுக்கோட்டை - என். ராமசந்திரன்
திருப்பத்தூர் - K.C. திருமுருகன்
மதுரை தெற்கு - ராம ஸ்ரீனிவாசன்
சாத்தூர் - நயினார் நாகேந்திரன்
திருச்செந்தூர் - KRM ராதாகிருஷ்ணன்
வாசுதேவநல்லூர் - ஆனந்தன் ஐயா சாமி
ராதாபுரம் - பாலகிருஷ்ணன்
நாகர்கோவில் - காந்தி
விளவங்கோடு - விஜயதாரணி
ஆவடி - அஸ்வின் குமார்
திருவண்ணாமலை - ஏழுமலை
தஞ்சாவூர் - முருகானந்தம்
திருவாரூர் - கோவி சந்துரு
அறந்தாங்கி - கவிதா ஸ்ரீகாந்த்
மானாமதுரை - வி. பாலகணபதி
ராமநாதபுரம் - கே. நாகேந்திரன்
குளச்சல் - சிவகுமார்
பத்மநாபபுரம் - பி. ரமேஷ்
ராசிபுரம் - பிரேம் குமார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.