
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கலைகட்டத் தொடங்கியுள்ளது. கொடைக்கானல் இதயம்போன்றது கொடைக்கானல் ஏரி.
இந்த ஏரியில் கொடைக்கானல் நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் மூன்று படகு இல்லங்களில் இருந்து படகு சவாரி வசதி உள்ளது. கொடைக்கானலில் சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமால், சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்து மகிழ்ந்து உற்சாகமடைந்தனர்.
மேலும், கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் நகராட்சி படகு இல்லம் ஒன்று மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்து பயணிகளுக்கு படகுகளை சவாரி செய்ய வழங்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க } தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தமிழிசை இருப்பேன்...!!