"Sweet Uncle.. Watchlist-ல் Add பண்ணிக்கோங்க" - ஸ்டாலினை சீண்டும் தவெக IT Wing! 'வெப் சீரிஸ்' பெயர்களால் மோதிக்கொள்ளும் கட்சிகள்

பல ஆங்கில Web Series-களுக்கு திமுகவின் ஆட்சி இலட்சணம்தான் Inspiration என்று சொன்னால் அது மிகையாகாது.
TVK vs DMK
TVK vs DMK
Published on: 
Updated on: 
1 min read

தேனியில் 17 கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் தவெக அரசினை கண்டித்து திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் தனது X தளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில் அவர், சில ஆங்கில தொடர்களின் பெயர்களை குறிப்பிட்டு தனது கண்டன பதிவினை பதிவிட்டிருந்தார். அதற்கு தவெக-வின் IT Wing நகைச்சுவையாக விமர்சித்து அவர்களது சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளனர்.

தனது X தள பதிவில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் 'Breaking Bad' மற்றும் 'Prison Break' போன்ற ஆங்கில தொடர்களின் பெயர்களை தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகிறார். 'Breaking Bad' என்பது தவெக-வின் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் 'Prison Break' என்பது தற்போது தேனியில் தற்போது கைதிகள் தப்பி ஒட்டியுள்ள பிரச்சனைக்கும் குறிப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார். இதனை நகைச்சுவையாக விமர்சிக்கும் வகையில் தவெக தனது IT Wing பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், "கொரோனா காலத்தில் பொழுதுபோக்காக அனைவரும் பார்த்த Web Series-களை, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தற்போது வீட்டில் பொழுதுபோக்காகப் பார்த்து வருகிறார். நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பதால் அவருக்கும் போரடிக்கும்ல!

பல ஆங்கில Web Series-களுக்கு திமுகவின் ஆட்சி இலட்சணம்தான் Inspiration என்று சொன்னால் அது மிகையாகாது. Narcos, Money Heist, Scam போன்ற Web Series-களுக்கான தொடக்கப்புள்ளியே திமுகவின் வரலாறுதான்! சர்க்கரை ஊழலில் தொடங்கி, இன்று நடிப்பு அரக்கனின் பள்ளிக்கூட ஊழல் வரை, திமுகவின் ஊழல் வரலாறு உலகப்புகழ் பெற்றதென Sweet Uncle credit stealing செய்து பெருமிதம் கொள்வார்.

மேலும், விரைவில் வெளியாகவுள்ள 2G Files, Cable Chronicles, Toilet Scam, Extortion Game Web Series-களில் திமுக வரலாறுகளில் சில content-களாக இடம்பெற உள்ளன. அவற்றையெல்லாம் உங்கள் Watchlist-இல் Add செய்துகொண்டு கண்டு மகிழுங்கள், Sweet Uncle!" என்று பதிவிட்டுள்ளனர். திமுக சார்பில் தவெக-வை விமர்சித்து பதிவிடப்படும் ஒவ்வொரு பதிவிற்கும் தொடர்ச்சியாக பதில் பதிவுகளை காட்டமாக தவெக IT Wing பதிவிட்டவண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com