"தவெக-வில் இணைந்தார்கள் விஜயபாஸ்கர்கள்!" அலைகடலென வந்த அதிமுக ஆதரவாளர்கள் - 'தனியார் விடுதியில் களைக்கட்டிய இணைப்பு விழா!'

திமுகவோடு இணைந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகலாம் என்று எண்ணுகின்ற போதுதான் எல்லோருக்கும் இங்கே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது".
TVK joining event
TVK joining eventTVK joining event
Published on
Updated on
2 min read

அதிமுகவில் இருந்து விலகி தங்களது பதவியை ராஜினாமா செய்த சி. விஜயபாஸ்கர் மற்றும் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும், தவெக-வில் இன்று இணைவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் அதற்கான விழா நடைபெற்றது. மேலும், அங்கு வந்த அதிமுக-வினருக்கு, இட்லி, வடை, பொங்கல் போன்ற உணவுகள் பரிமாறப்பட்டன.

இரண்டு விஜயபாஸ்கர்களும் மட்டுமின்றி 200 பேருந்துகளில் சாரை சாரையாக அதிமுக தொண்டர்கள் மற்றும் விஜயபாஸ்கர்களின் ஆதரவாளர்கள் ஆகியோர் தவெக-வில் இணைய காலை முதலே வரத் துவங்கினர். மேலும், இந்த விழாவில் அமைச்சர்களான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் பேசிய அமைச்சர், மாற்றார் வியக்கத்தக்க வகையில் இந்த இணைப்பு விழா நடப்பதாகவும், கடல் அலையா? அல்லது மக்கள் அலையா? என்று கேட்கும் அளவிற்கு கூட்டம் இருப்பதாகவும் அவர் பேசினார். மேலும், "சிலர் கேட்கிறார்கள்? துரோகிகளா இவர்கள் இங்கே வருகிறார்கள்? என்று, ஒருத்தன் நான் சொல்ல விரும்புகிறேன் துரோகம் எங்கு நடைபெறுகிறது என்று நீங்கள் காண வேண்டும். திமுகவோடு இணைந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகலாம் என்று எண்ணுகின்ற போதுதான் எல்லோருக்கும் இங்கே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது".

தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருகிறார்கள் என்றால் வெற்றி தளபதியை நம்பினால் மட்டும்தான் நாடு வாழும், நாட்டு மக்கள் வாழ்வார்கள் என்று நம்புகிறார்கள். துரோகம் செய்தவர்கள் அங்கே இருக்கக்கூடும். நேர்மை எங்கே இருக்கிறது? நியாயம் எங்கே இருக்கிறது? என்று பார்த்து வந்திருக்கிறார்கள்" என்றும் அவர் பேசினார். எப்போது ஆட்சி கவிழும் என்று நரிபோல காத்துக்கொண்டிருக்கும் திமுக-வினரோடு பேசி எப்போது ஆட்சியமைக்கலாம் என்று கனவு காணுபவர்களை தகர்தெறிபவர்களாக வந்திருக்கிறீர்கள் என்று பேசினார்.

மேலும், அம்மாவின் படத்தையே தான் இன்றும் சட்டைப்பையில் வைத்திருப்பதாகவும், அதனை வைத்துக்கொள்ள அனுமதித்தவர்தான் முதல்வர் என்றும், அதுதான் எனக்கு மகிழ்ச்சி என்று பேசியவர் முதல்வர் என்று பேசினார் அமைச்சர் செங்கோட்டையன். புரட்சி தலைவருடனும், புரட்சி தலைவியுடனும், தற்போது புரட்சி தலைவர் வெற்றி தலைவரோடு பயணிப்பதாக அவர் கூறினார். மேலும், புரட்சி தலைவி அம்மாவை 21 நாட்கள் சிறையில் அடைத்தவர்களோடு கூட்டணி அமைக்க நினைப்பவர்களை தகர்தெறிய வேண்டும் என்று பேசினார். துரோகம் இங்கே இல்லை என்றும் துரோகம் நினைத்தவர்கள் அங்கே இருக்கிறார்கள் என்றும் அவர் பேசினார். இந்திய வரலாற்றில் ஒரு தூய்மையான தலைமை என்று புகழாரம் சூட்டினார். புரட்சி தலைவர், புரட்சி தலைவி ஆகியோர் இருந்தது இயக்கம் என்றும் தற்போது எடப்பாடி பழனிசாமி இருப்பது கம்பெனி என்று சாடினார். அங்கே சனி பிடித்திருப்பதாகவும் தவெக-வில் குரு இருப்பதாகவும் பேசி நிறைவு செய்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com