

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு தற்போது மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடர்ச்சியாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் மற்றம் இருக்கும் என்று கூறிய நிலையில் தற்போது அது நடந்துள்ளது. சட்டமனற்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தமிழக காங்கிரசில் பல்வேறு மாற்றங்களை தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்வப்பெருந்தகை திமுகவிற்கு ஆதரவாக பேசிவருகிறார் என்றும், மற்ற கட்சியில் 2 கட்ட நிர்வாகிகளும் கூறிவந்த நிலையில் இது நிகழ்ந்துள்ளது. மேலும், தவெக கூட்டணிக்கு முன்பே அதாவது தேர்தலுக்கு முன்பே மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவின் சக்கரவர்த்தி ஆகியோர் ஆதரவாக இருந்த நிலையில் தற்போது தலைவராக கே.சி. வேணுகோபால் அதிகாரபூர்வமாக நியமித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தவெக காங்கிரஸ் கூட்டணி அமைய காரணமாக இருந்த பிரவீன் சக்கரவர்த்திக்கு ராஜ்ய சபா பதவி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது மாணிக்கம் தாகூருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் விருதுநகர் MP-யாக தற்போது பதவி வகித்து வருகிறார். இவர் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து பெங்களூரு சட்டக்கல்லூரியில் சட்டபடிப்பினை முடித்துள்ளார். மேலும் இவர் 1994ல் இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் மாவட்ட பொதுச்செயலாளராக தனது அரசியல் பயணத்தை துவங்கினார். பின்னர் 2009, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எப்போதும் புதிய கட்சிகள் கூட்டணியில் வரும்பட்சத்தில் பொதுவாக மாநில தலைவர்களை மாற்றி விடுவார்கள். காரணம், புதிய கட்சிகளோடு தலைவர்கள் ஒரு நல்ல இனத்தில் இருக்கவேண்டும் என்று இவ்வாறு செய்வதுண்டு. இதற்கு முன்பு தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை தவெக அரசினை குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக தயாரிப்பாளர் வெங்கட நாராயணா டெல்லி பிரதிநிதியாக நியமித்ததற்கு கூட தன்னுடைய கேள்வியினை முன்வைத்தார். இதற்காக அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது நடந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். மேலும் புதியத்தலைவர் மாறியுள்ளதால் மாநிலத்தில் பல்வேறு மாற்றங்களும் பொறுப்புகளும் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.