திமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறும் நிலையில் தற்போது மதிமுக கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறது. இதுகுறித்து தெளிவுபடுத்த செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ. நாங்கள் இப்படி முடிவெடுப்பதற்கு முன்னதாகவே திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எங்கள் இயக்கத்தை பற்றி கொச்சைப்படுத்தி சில சொற்களை வீசினார். நாங்கள் ஏற்கனவே விலகிப்போய்விட்டதாக அவருடைய அமைப்பு செயலாளரும் கூறினார். அனைத்திற்கும் மேலாக இப்பொது போட்டியிட 4 இடங்களில் திமுகவின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து நாங்கள் போட்டியிட கடையநல்லூர் தொகுதியிலும், சீர்காழி தொகுதியிலும் நாங்கள் வெற்றிப்பெற்றிருந்தோம்.
சீர்காழி தொகுதியில் வெற்றிபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான வழக்கறிஞர் செந்தில் செல்வன் நேற்றைய தினத்திலேயே உயர்நிலை குழுவிற்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தும் அதில் அவர் பங்கேற்கவில்லை. ஆனால், ஊடகங்களுக்கு கொடுத்த பதிலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் நீடிக்கவில்லை என்றும் திமுகவில் இணைந்து விட்டதாகவும் நேற்றைய தினத்தில் அவரது கருத்தினை கூறியிருந்தார். கடையநல்லூர் தொகுதியிலே தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜேந்திரனும் பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. ஆனால் பொதுக்குழு நடந்துகொண்டிருக்கும்போது ஒரு பதிவு ஒன்றினை அனுப்பினார்.
அதில், அவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற காலத்திலேயே நீடிப்பதாகவும், மதிமுகவின் பிரதிநிதியாகவே சட்டமன்றத்தில் பிரதிபளிக்கப்போவதாகவும் வரமுடியாமல் போனதை தவறாக என்ன வேண்டாம் என்பதுபோல் ஒரு பதிவினை அனுப்பியிருந்தார். மேலும், கட்சியில் அனைவரும் ஒருமனதாக திமுகவில் இருந்து வெளியேறுவது என்ற முடிவினை எடுத்துள்ளதாக வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாஜக காலூன்றி விடக் கூடாது என்பதற்காத்தான் கடந்த 9 ஆண்டுகள் திமுக கூட்டணியில் இருந்ததாகவும், ஒருகுறைகூட திமுகவை கூறியது இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், திமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பேபியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகமும் அதே கருத்தினை கூறிருந்தார். மேலும், IUML காதிலும் அதே கருத்தினை முன்வைத்தனர் என்றும் கூறினார்.
"அப்படி ஒரு விஷயம் நடந்திருக்குமேயானால் அப்படி ஒரு அரசியல் மோசடி வேறு ஒன்றும் இருக்கமுடியாது" என்று சேத்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும், தினகரன் நாளிதழில் தவெக தலைவர் விஜய்யிடமிருந்து 50 கோடி வைகோ வாங்கியதாக பொய்யான பழி கூறியதோடு OMRல் 116 பிளாட்டுகளை கொண்ட மொத்த பிளாட்டுகளையும் துரை வைக்கோ வாங்கிவிட்டார் என்றும் பொய்யையும் பரப்பிவருவதாக வைகோ கூறினார். தன்னுடையபாட்டனாரே பல சொத்துக்களை வைத்திருந்ததாகவும், அவற்றில் பலவற்றை வைகோவே விற்றிருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வாறு பலிக்குரியவர்கள் மீது மான நஷ்ட வழக்கு போடவிருப்பதாகவும் வைகோ கூறினார். தன்னுடைய நேர்மைக்கு யாரும் நற்சான்றிதழ் வழங்கவேண்டியது இல்லை என்றும் வருகின்ற 5 தொகுதி இடைத்தேர்தலில் தவெக ஆதரவு அளிப்பதாகவும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் வறுமேயாலும் கூட இதுவே தொடரும் என்று கூறினார்.
செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த வைகோ, இப்போது உள்ள ஆட்சியில் ஊழல் இல்லை என்றும் சமூக நீதியை பிதுக்கப்பதில் உறுதியாக நிற்கிறது என்றும், இருமொழி கொள்கையை நிலைநாட்டுவது, அண்ணாவின் கொள்கையை பின்பற்றுவது போன்றவற்றால் தவெகவை ஆதரிப்பதாக வைகோ கூறினார். ஒருவேளை 2 MLAகளும் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும் அப்படி வரும்போது நானே வந்து பிரச்சாரம் செய்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் கூறியதாக அவர் கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ராஜினாமா செய்யசொல்லவது தவறு ஒன்றும் இல்லை அது குதிரைப்பாராம் கிடையாது என்றும் தங்களது கட்சியில் இருந்து ஒரு MLAவை அழைத்து சென்றிருப்பது குதிரை பேரமா இல்லை ஒட்டக பேரமா? என்று கேள்வி எழுப்பினார். தங்களை சரியாக நடத்தவில்லை என்றும் ஆ. ராசா மதிமுகவை அவமதிக்கும் வகையில் பேசினார் என்றும் அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இந்திய கூட்டணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.