தேசிய கீதம் பாடாமல் சென்னை பொருட்காட்சி நிறைவு!!!

தேசிய கீதம் பாடாமல்  சென்னை பொருட்காட்சி நிறைவு!!!
Published on
Updated on
1 min read

78 நாட்கள் நடைபெற்ற 47வது சுற்றுலா பொருட்காட்சி இன்றுடன் நிறைவு பெற்றது
இந்தாண்டு மொத்தமாக 8 லட்சத்து 30 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்றுள்ளனர்

தீவுத்திடலில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் மற்றும் ராமச்சந்திரன் பங்கேற்ற நிறைவு நாள் நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதம் பாடாமல் முடித்துக் கொள்ளப்பட்டது

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு 47-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி கடந்த ஜனவரி நான்காம் தேதி தொடங்கி தொடர்ந்து 78 நாட்கள் நடைபெற்றது.

27 அரசுத் துறைகள்

சுற்றுலா பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள், 21 பொதுத் துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது அதே போல நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய கடைகள் விளையாட்டு அம்சங்கள் இடம்பெற்று இருந்தது.

இந்த பொருட்காட்சிக்கான நினைவு நாள் நிகழ்ச்சி இன்று தீவுத்திடலில் நடைபெற்றது இதில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்...

பல்வேறு தரப்பட்ட அரங்குகள் அமைத்து அதிக அளவிலான மக்களை ஈர்க்கும் வகையில் இந்த ஆண்டு சுற்றுலா பொருட்காட்சி அமைந்திருந்தது இந்த வழியாக ஒவ்வொரு முறை தலைமைச் செயலகம் செல்லும் போதும் ஆயிரக்கணக்கில் மக்கள் மகிழ்ச்சியுடன் இங்கு வருவதை என்னை போன்ற அமைச்சர்கள் பார்த்திருக்கிறோம். அதேபோல சுகாதாரத்துறை சார்பில் இங்கு அரங்கம் அமைப்பதற்கு பல்வேறு அதிகாரிகளுடன் பலமுறை ஆலோசனை செய்ததற்கு பிறகு அரங்கம் அமைத்தோம் என்று தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்...

8,30,000 பேர் இந்த பொருட்காட்சியை பார்வையிட்டுள்ளனர் என்றார் மேலும்
2020 ம் நடைபெற்ற பொருட்காட்சியை ஒப்பிடும் போது 1,15,000 பேர் கூடுதலாக இந்த ஆண்டு பார்வையிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசி அமைச்சர் இந்த பொருட்காட்சி மூலமாக நேரடியாக 10,000 பேரும் மறைமுகமாக முப்பதாயிரம் பேரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார். நிகழ்ச்சியில் பொருட்காட்சியில் அதிக கவனம் பெற்ற அரங்குகளுக்கு அமைச்சர்கள் பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கி சிறப்பித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com