ஏனோ வானிலை மாறுதே.. சென்னையில் இன்று கனமழை! அந்தமான் நோக்கி நகரும் சுழற்சி.. ஆய்வு மையம் எச்சரிக்கை

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் பட்சத்தில், அதன் நகர்வு மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அடுத்தகட்ட வானிலை மாற்றங்கள் கணிக்கப்படும்.
Chennai Rain Alert: Heavy Downpour Expected Today as Weather System Moves Toward Andaman
ஏனோ வானிலை மாறுதே.. சென்னையில் இன்று கனமழை! அந்தமான் நோக்கி நகரும் சுழற்சி.. ஆய்வு மையம் எச்சரிக்கை
Published on: 
Updated on: 
1 min read

இன்று சென்னையில் கனமழை முதல் அதிகனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 26ஆம் தேதி வரை பரவலாகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து, மியான்மர் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நாளை (அக்டோபர் 21) காலை வடக்கு அந்தமான் கடல் பகுதிக்குள் நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்த வளிமண்டலச் சுழற்சியின் தாக்கத்தால், வரும் அக்டோபர் 23ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் பட்சத்தில், அதன் நகர்வு மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அடுத்தகட்ட வானிலை மாற்றங்கள் கணிக்கப்படும்.

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், "தற்போது சென்னையின் சில பகுதிகளில் மிக நல்ல மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து பகல் நேரங்களில் வெயில்-மழை-வெயில்-மழை-வெயில் என வானிலை நிலவும். " எனக் கூறியுள்ளார்.

மீண்டும் மழைப்பொழிவு தொடங்கியுள்ள நிலையில், இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு மேற்கொண்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.

Chennai Rain Alert: Heavy Downpour Expected Today as Weather System Moves Toward Andaman
"ஊருக்குச் சென்றவர்களை வரவேற்கத் தயாராகும் மழை" - சென்னையைத் தவிர எங்கெங்கே ‘கனமழைக்கு’ வாய்ப்பு?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com