"ஊருக்குச் சென்றவர்களை வரவேற்கத் தயாராகும் மழை" - சென்னையைத் தவிர எங்கெங்கே ‘கனமழைக்கு’ வாய்ப்பு?

சென்னையில் இன்று அவ்வப்போது சடாரென சிறிது நேரத்துக்கு மழையும், இடைவெளிகளில் வெயிலும் இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Heavy Rain to Intensify in Chennai from This Evening, Continue Till Tomorrow Morning
"ஊருக்கு சென்றவர்களை வரவேற்க தயாராகும் மழை" சென்னை தவிர எங்கெங்கே 'கனமழைக்கு' வாய்ப்பு?
Published on: 
Updated on: 
1 min read

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அரபிக்கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். அக். 21-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து, அக். 22-ஆம் தேதி சோமாலியக் கடற்கரை நோக்கி நகரும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுவதன்படி, இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகனமழை பெய்யக்கூடும்.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று அவ்வப்போது சடாரெனச் சிறிது நேரம் மழையும், இடைவெளிகளில் வெயிலும் இருக்கும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மாலை முதல் மழை அதிகரித்து, நாளை காலை வரை நீடிக்கும் எனக் கூறியுள்ளார்.

இதனால், விடுமுறைக்காக ஊருக்குச் சென்றவர்களை மழை வரவேற்கத் தயாராகி வருவதாகக் கூறியுள்ளார்.

Heavy Rain to Intensify in Chennai from This Evening, Continue Till Tomorrow Morning
விஜய் முன்னிலையில் கிடைத்த வாய்ப்பு.. 90 வினாடிகளில் மோடியிடம் 'AI ஐடியாக்களை' சொன்ன இளைஞர் - யார் இவர்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com