``சென்னைக்கு அடுத்த மழை எப்போது?" ஆந்திராவை குறிவைக்கும் 'முரசு புயல்'.. அப்டேட் வழங்கிய வானிலை ஆய்வாளர்!

அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"Rain for Chennai?" 'Murasu Cyclone' Targeting Andhra? Weather Expert Gives Update
``சென்னைக்கு அடுத்த மழை எப்போது?" ஆந்திராவை குறிவைக்கும் 'முரசு புயல்'.. அப்டேட் வழங்கிய வானிலை ஆய்வாளர்!AI Generated
Published on: 
Updated on: 
1 min read

சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே 1,140 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

இது ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து தென்மேற்கு திசையில் 330 கி.மீ தொலைவிலும், கார் நிக்கோபரில் இருந்து வடமேற்கு திசையில் 300 கி.மீ தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 1,200 கி.மீ தொலைவிலும் உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலாக மாறும்பட்சத்தில் இதற்கு முரசு என்றுப் பெயரிடப்படும். முரசு புயல் ஆந்திரவைத்தான் தாக்கும் என்றும் நமக்கு பெரிதாக ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

Cyclone Murasu
Cyclone Murasuhttps://x.com/praddy06

சென்னை உள்ளிட்ட KTCC (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) பகுதிகளுக்கும் வட தமிழக மாவட்டங்களுக்கும் நவம்பர் 2,3 தேதிகளில் ஓரளவு மழை கிடைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆந்திராவில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும், குறிப்பாக பொன்னேரி-குமிடிப்பூண்டி-புலிக்காட் பெல்ட்டில் மழை பெய்ய வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

புயலின் இழுவிசை காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் பலத்த காற்றும், மழைப்பொழிவும் இருக்கலாம் எனக் கூறியிருக்கிறார்.

"Rain for Chennai?" 'Murasu Cyclone' Targeting Andhra? Weather Expert Gives Update
``திமுக ஆதரவுடன் சீமான்?" அம்பாசமுத்திரத்தில் ஸ்டாலின் போடும் 'புள்ளிவிவரக் கணக்கு'.. ரிஸ்க் எடுக்குமா நாதக? தனி ரூட்டில் EPS!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.