``அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் கொட்டிய மழை.." சென்னை மக்களை சோதிக்கும் மழை எவ்வளவு நேரம் தொடரும்?

"மேகப் பட்டையும் மிகவும் தீவிரமாகத் தெரிகிறது. சென்னை முழுவதும் வடக்கு முதல் தெற்கு வரை சின்ன சின்ன, தீவிரமான மழையை எதிர்பார்க்கலாம்." எனப் பதிவிட்டுள்ளார் வானிலை ஆர்வலர்.
heavy rain in chennai
``அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் கொட்டிய மழை.." சென்னை மக்களை சோதிக்கும் மழை எவ்வளவு நேரம் தொடரும்?
Published on: 
Updated on: 
1 min read

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பெருவாரியாக மழைப் பொழிந்திருக்கிறது. வட தமிழ்நாடு, காவிரி டெல்டா பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்துடன் தொடர்புடைய கிழக்கத்திய அலையின் தாக்கத்தால், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இன்று காலை முதல் மூன்று அலையாக மழை பெய்திருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பக்கத்தில் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், "இன்றைய நாளின் மூன்றாவது சுற்று ஆட்டம் சென்னைக்குள் நுழைகிறது.

அதிகாலையில் ஒரு முறையும், நண்பகல் வாக்கில் மற்றொரு முறையும் மேகமூட்டம் ஏற்பட்டது. இப்போது, ​​நாங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் இந்த மேகக்கூட்டம் கச்சிதமாக அமைந்துள்ளது!

மேகப் பட்டையும் மிகவும் தீவிரமாகத் தெரிகிறது. சென்னை முழுவதும் வடக்கு முதல் தெற்கு வரை சின்ன சின்ன, தீவிரமான மழையை எதிர்பார்க்கலாம்." எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர், "நாளை அதிகாலை மற்றும் காலை நேரங்களில் காவேரி டெல்டா பகுதியிலும் பரவலான மழை பெய்யும்." எனக் கூறியுள்ளார்.

இன்று அதிகாலை 6 மணி முதல் மாலை 6 வரையிலான நேரத்தில் அதிகபட்சமாக உத்தண்டி பகுதியில் 3.5 செ.மீ, சோழிங்கநல்லூரில் 3.2 செ.மீ, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 3 செ.மீ, சைதாப்பேட்டையில் 2.6 செ.மீ மழையும் பதிவாகியிருக்கிறது.

heavy rain in chennai
புகார் எங்கே? நடவடிக்கை எங்கே? 'CM விஜய்' ஆய்வில் கள்ளக்குறிச்சி விவகாரம்.. நறுக்கென்று கேட்ட நீதிபதி!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்