

வங்கக்கடலில் உருவாகிய டித்வா புயல் இலங்கையை அடித்து நொறுக்கிய கையோடு, தமிழகம் வந்தது. ஆனால் நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையிலும் பெரும் மழை பொழிவு எதையும் தரவில்லை. ஆனால் இன்று சென்னை நகரத்துக்குள் நிலைகொண்ட மேகங்கள் பெரும் மழைப் பொழிவை தந்து வருகின்றன.
நேற்று அதிகாலை முதல் தற்போது வரை பெய்துவந்த மழையால் சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (தித்வா புயல் ) கடந்த 6 மணி நேரமாக நிலையாக இருந்தது, நேற்று இரவு 11.30 மணி அளவில் சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கிமீ, புதுச்சேரிக்கு வடகிழக்கே 140 கிமீ, கடலூர் க்கு வடகிழக்கே 160 கிமீ, நெல்லூருக்கு தென்கிழக்கே 170 கிமீ தொலைவில் உள்ளது.
இந்நிலையில் சென்னையில் கடந்த 24 மணி நேரமாக தொடர் மழை யது வருகிறது. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 6.30 மணி வரை 8 இடங்களில் மிக கனமழை பதிவாக உள்ளது. மூன்று இடங்களில் கன மழை பதிவாகி உள்ளது.
எழும்பூர், அயனாவரம், கிண்டி, மாம்பலம், மயிலாப்பூர் பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய 8 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. புரசைவாக்கத்தில் அதிகப்படியாக 189 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆலந்தூர் அம்பத்தூர் சோழிங்கநல்லூரில் கனமழை பதிவாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.