திடீரென இருக்கை மாறிய முதல்வர் விஜய்! ஆச்சரியப்பட்ட அமைச்சர்கள்!

விஜய்க்கு வலதுபக்கம் செங்கோட்டையனும், இடதுபக்கம் ஆதவ் அர்ஜுனாவும் அமர்ந்திருந்தனர்.
திடீரென இருக்கை மாறி அமர்ந்த முதல்வர்; ஆச்சரியப்பட்ட அமைச்சர்கள்!
திடீரென இருக்கை மாறி அமர்ந்த முதல்வர்; ஆச்சரியப்பட்ட அமைச்சர்கள்!
Published on
Updated on
1 min read

தமிழக சட்டமன்றத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் சமூக நீதித்துறைக்கான மானியக் கோரிக்கைகள் நடைபெற்றன.

காலை முதல் நடைபெற்று வரும் பேரவையில், பிற்பகலுக்குப் பிறகு சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் நடைபெற்றன.

விஜய்
விஜய்

காலையில் வெவ்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், வழக்கத்துக்கு மாறாக தனது இருக்கையிலிருந்து மாறி, சற்று நேரம் முக்கிய அமைச்சர்கள் மத்தியில் அமர்ந்திருந்தார். இது அமைச்சர்களை ஆச்சரியப்பட வைத்ததுடன், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

விஜய்க்கு வலதுபக்கம் செங்கோட்டையனும், இடதுபக்கம் ஆதவ் அர்ஜுனாவும் அமர்ந்திருந்தனர்.

செங்கோட்டையன் தொடர்ந்து விஜய்யிடம் பேசிக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது.

முதலமைச்சருக்கான தனி இருக்கை சபாநாயகருக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும்.

சட்டப்பேரவையில், அவையின் உறுப்பினர்கள் சக உறுப்பினர்களுடன் உரையாடுவதற்காக அவ்வப்போது சிறிது நேரம் தங்கள் இருக்கைகளை மாற்றிக்கொள்வதுண்டு. ஆனால், முதல்வர் அமைச்சர்கள் நடுவில் சென்று அமருவது வழக்கமானது அல்ல.

செங்கோட்டையன், விஜய்
செங்கோட்டையன், விஜய்

விஜய் அமர்ந்த முக்கிய அமைச்சர்கள் இருக்கையில், அருண்ராஜ், நிர்மல் குமார், வெங்கட்ரமணன், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் ஆகியோர் உடன் அமர்ந்திருந்தனர்.

இந்த இருக்கைக்கு எதிரே எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அமர்வதும், அவர்களைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அமர்வதும் வழக்கம்.

திடீரென இருக்கை மாறி அமர்ந்த முதல்வர்; ஆச்சரியப்பட்ட அமைச்சர்கள்!
"என்னை தேர்வு செய்த..." - கீர்த்தனா நன்றி சொன்ன அந்த 'அண்ணன்' யார்? விஜய்யின் நிழல் இவர்தானா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com