கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவை பார்க்க.. ஓடோடி வந்த முதல்வர் விஜய்.. மருத்துவர்களுக்கு இட்ட "அன்புக் கட்டளை" - நெகிழ்ந்து கலங்கிய சம்பவம்

இன்று முதலமைச்சர் விஜய், வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
Vijay and VS Babu (file Image)
கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவை பார்க்க.. ஓடோடி வந்த முதல்வர் விஜய்.. மருத்துவர்களுக்கு இட்ட "அன்புக் கட்டளை" - நெகிழ்ந்து கலங்கிய சம்பவம்File Image
Published on
Updated on
1 min read

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவுக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்னர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், நேற்றைய தினம் வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று முதலமைச்சர் விஜய், வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இன்று காலை அவர் ICU-வில் இருந்ததாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

வி.எஸ். பாபுவை சந்தித்ததுடன், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், மருத்துவர்களிடம் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

எந்தவிதத் தொய்வும் இல்லாமல் உயர்தர சிகிச்சை வழங்கவும், அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறும் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது

14 நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் வி.எஸ். பாபுவை ஏற்கெனவே அமைச்சர் அருண் ராஜ் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து, அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தனர்.

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபுவுக்கு பல்வேறு துறை நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று வெளியானதைப் போல, இன்றும் அவரது உடல்நிலை குறித்த செய்திக்குறிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay and VS Babu (file Image)
சென்னை 6% பெங்களூரு 14.5%.. 6வது இடத்துக்கு தள்ளப்பட்ட விமான நிலையம்.. விஜய் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் என்ன சொல்கிறார்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com