ஜீனியர் மாணவர்களின் அறையில் புகுந்து சீனியர் மாணவர் பணத்தை திருடியதாக கூறி , ஜூனியர் மாணவர்கள் சீனியர் மாணவரை தாக்கியதுடன் அதை வீடியோவாக பதிவு செய்தனர்.
மாணவர் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த ஜூனியர் மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
சம்பவம் தொடர்பாக கா.கா சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறு பேரை கைது செய்துள்ளனர். தாக்குதல், அநாகரிகமான செயல், கடுமையான காயம் ஏற்படுத்தல், மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை.
மேலும் படிக்க: "அதிமுக-வை இயக்கும் பாஜக" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் பரபரப்பு
சம்பவம் தொடர்பாக 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் முதற்கட்டமாக ஆறு பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
18 வயது நிறைவடைந்த மூன்று மாணவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட இருப்பதாகவும், 18 வயதுக்கு கீழ் உள்ள அனைவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழிசை பேசிய பஞ்ச் டயலாக்...சூசகமாக சொன்ன மெசேஜ் இது தான்
13 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு, மூன்று பேர் சிறைக்கும் மற்றவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவதாகவும், தொடர்ச்சியாக ஆறு பேரைத் தொடர்ந்து மற்றவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தகவல்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்