தமிழ்நாடு அரசின் 2 ஆண்டுகள் குறித்து இறையன்பு கருத்து...

தமிழ்நாடு அரசின் 2 ஆண்டுகள் குறித்து இறையன்பு கருத்து...
Published on
Updated on
1 min read

பல விரும்பத்தக்க மாற்றங்கள்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 2 ஆண்டுகள் குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு கருத்து. தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் ஏற்றத்தைக் கொண்டு வருவதற்காக, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்விப் பரவலாக்கம், உயர் கல்வியில் மேம்பாடு, திறன் வளர்ச்சி நலத் திட்டங்கள் என பல அறிவிப்புகளை அளித்து, அரசாணைகளாக வெளியிட்டு, செயல்படுத்தி வருகிறது. 

அவற்றின் காரணமாக, பல விரும்பத்தக்க மாற்றங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தீட்டிய திட்டங்களையும், செயல்படுத்திய விவரங்களையும் ஆவணப்படுத்துவது மிகவும் முக்கியம். ஆவணப்படுத்துவது, நாம் நடந்து வந்தப் பாதையைத் தெளிவுபடுத்துவதற்கும், கடக்கவேண்டிய தூரத்தைத் துரிதப்படுத்துவதற்கும் சாதகமாக இருக்கும்.  திட்டங்களை அசைபோடுவதற்கும், மேம்படுத்துவதற்கும், மெருகேற்றுவதற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்த சாதனைகளைத் தொகுப்பது அவசியம்.   

 மேலும் படிக்க|  தி கேரளா ஸ்டோரி" திரையரங்கத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சி                                                                   

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com