தஞ்சை மாநகராட்சி மாதந்திர கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் மாமன்ற கூட்ட அரங்கில் நடைப்பெற்றது. அப்போது அமமுக மாமன்ற உறுப்பினர் கணணுக்கினியாள் கடந்த வாரம் இடிந்து விழுந்த ஆதாம் பாலம் குறித்து கேள்வி எழுப்பினார். திமுக உறுப்பினர்களை பார்த்து மேயர், "இவ்ளோ பேர் இருக்கிறீர்கள் வாயில் என்ன வைத்துள்ளீர்கள்", என்றார்.
உடனே திமுக உறுப்பினர்கள் அதிமுக ஆட்சியில் கட்டிய பாலமும் தான் இடிந்தது என பதில் அளித்தனர்.. இதற்கு இடையே அதிமுக உறுப்பினர்கள் பகுதியில் இருந்த மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திமுக மாமன்ற உறுப்பினர் பாலா, அதிமுக உறுப்பினர் கேசவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியதோடு பெண் உறுப்பினர்கள் மத்தியில் அருவருக்கதக்க வகையில் ஆபாசமாக பேசினார்.
மேலும், ஐயப்பன், பாலா உள்ளிட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர்களை தாக்க முற்பட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் மோதிக்கொண்டு இருக்க கூட்டம் நிறைவடைந்துவிட்டதாக கூறி மேயர் சண்' ராமநாதன் எழுந்து சென்றார்.
இதனையடுத்து அதிமுக, அமமுக .பாஜக உறுப்பினர்கள் மாமன்ற கூட்ட அறையில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனிடையே, அதிமுக, அமமுக உறுப்பினர்களை திமுக உறுப்பினர்கள் தாக்கிய சம்பவம் குறித்து கேள்விப்பட்ட இரு தரப்பு ஆதரவாளர்களும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பதற்றம் நிலவியது.