

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்தரசன், தேனியில் ரெயின்போ ஓட்டுநர் பயிற்சி பள்ளியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்தித்த போது, தற்போதைய அரசியல் களம் மற்றும் ஆளும் அரசு குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
தற்போது அதிமுக சேர்ந்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும். தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து வருவது குறித்து செய்தியாளரின் எழுப்பிய கேள்விக்கு, “கடந்த ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஆளும் கட்சியினர் அமலாக்கத்துறை லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்கு பதிவு செய்வது வழக்கம்” என்றும் “இதற்கு பயந்து தான் கட்சியிலிருந்து விலகி, தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து வருகின்றனர். என்று தெரிவித்தார். மேலும் கட்சியில் இணைந்து தூய்மையாளர்களாக தங்களை காட்டிக் கொள்வதற்காக ராஜன் அடைகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
தற்போது தமிழக வெற்றி கழகம் ஆட்சி குறித்து பேசிய முத்தரசன், “இப்போதுதான் குழந்தை பிறந்து இருக்கிறது, இன்னும் குழந்தைக்கு தொப்புள்கொடி கூட அறுக்கப்படவில்லை.. இனி குழந்தை வளர்ந்து வந்த பிறகுதான் அது எப்படி இருக்கும் என்பதை பற்றி கூற முடியும்.. குழந்தை தேருமா தேராதா என கூற முடியும்” என்று ஆளும் அரசான தமிழக வெற்றி கழகத்தை குழந்தை என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒற்று வருமா? என்ற கேள்விக்கு “ஒரு கத்திரிக்காயும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது” என்றும் “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் 107 உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர் ஆளுநரிடம் கேட்டதற்கு முறையாக ஆளுநர் எந்த பதிலும் தராத நிலையில் வெளியில் இருந்து நாங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மற்ற கட்சியினர் ஆதரவளித்துள்ளோம்” என கூட்டணி ஆதரவு குறித்து தனது வெளிப்படையான கருத்தை முன் வைத்துள்ளார் கம்யூனிஸ்ட் முத்தரசன்.
புதியதாக அண்ணாமலை கட்சி துவங்க உள்ளாரே அதைப்பற்றி உங்கள் கருத்து என்ற கேள்விக்கு “பழைய கலயத்தில் உள்ளே வைக்கப்பட்ட புதிய கல் அவ்வளவுதான்’’ முடித்து புறப்பட்டர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.