"மண்டாடி" வந்து ஓஹோன்னு ஹிட் அடித்துள்ள வேளையில்.. மீன்வர்களுக்குள் மோதல்.. "கணவாய் மீன்" பிடிப்பதில் இவ்வளவு பிரச்சனை இருக்கா?

மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, “இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்
தூத்துக்குடி
Published on: 
Updated on: 
1 min read

தூத்துக்குடி வட பகுதியில் உள்ள முத்தரையர், காலனி விவேகானந்தர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் கணவாய் மீன் பிடிப்பு தொழில் மற்றும் சங்கு குளிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த மீனவர்கள் கணவாய் மீன் பிடிப்பிற்காக தூத்துக்குடியில் இருந்து கடல் மார்க்கமாக திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கடல் பகுதிக்கு சென்று கணவாய் மீன்கள் மற்றும் தூண்டில் மீன் பிடிப்பு செய்கின்றனர்.

தூத்துக்குடி

இந்நிலையில் இந்த பகுதிக்கு வரும் திருச்செந்தூர் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த மீனவர்கள் “தங்கள் பகுதியில் மீன் பிடிக்க கூடாது” என தெரிவித்து பிடித்த கணவாய் மீன்களை பறித்துக் கொண்டும், அங்கிருந்து அடித்து விரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்த போது முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி

இதைத்தொடர்ந்து இன்று கணவாய் மீன் பிடிப்பு தொழில் செய்யக்கூடிய மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீனவர்கள் தூத்துக்குடியில் உள்ள மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, “இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் மீனவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com