"இவங்க இன்னும் திருந்தவே இல்லையா?.." 3 மணிக்கு வரப்போகும் முதல்வருக்கு.. மண்டையை பிளக்கும் வெயிலில்.. இப்போதே சீறிப்பாய்ந்து இடம் பிடிக்கும் தொண்டர்கள்

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கூட்டம் வந்துள்ளதால் காவல்துறையினாரால் கட்டுப்படுத்த முடியாதநிலை உள்ளது.
"இவங்க இன்னும் திருந்தவே இல்லையா?.." 3 மணிக்கு வரப்போகும் முதல்வருக்கு.. மண்டையை பிளக்கும் வெயிலில்.. இப்போதே சீறிப்பாய்ந்து இடம் பிடிக்கும் தொண்டர்கள்
"இவங்க இன்னும் திருந்தவே இல்லையா?.." 3 மணிக்கு வரப்போகும் முதல்வருக்கு.. மண்டையை பிளக்கும் வெயிலில்.. இப்போதே சீறிப்பாய்ந்து இடம் பிடிக்கும் தொண்டர்கள்
Published on: 
Updated on: 
2 min read

தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டுள்ளார்.

விமானம் வழியாக கோவை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரம்–உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பரப்புரை திடலுக்கு செல்கிறார்.

மாலை 3 மணியளவில் பரப்புரை தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே விஜய்யைக் காண மக்கள் சாரைசாரையாக பப்புரை திடலுக்கு வருகை தந்துள்ளனர்.

dharapuram
dharapuram ai enhanced

காலை 10 மணிக்கெல்லாம் திடலை சுற்றிய பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி, நெருக்கடி உருவாக்கி வருகின்றனர்.

வெயில் அதிகரிக்க அதிகரிக்க பரப்புரை திடல் சவால் மிகுந்ததாக மாறிவருக்கிறது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கூட்டம் வந்துள்ளதால் காவல்துறையினாரால் கட்டுப்படுத்த முடியாதநிலை உள்ளது.

தடைகளை, கயிறுகளை தட்டிவிட்டு திடலை தொண்டர்கள் சூழ்ந்துள்ளனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் கும்பல் கும்பலாக வருகை தந்துள்ளனர். விஜய் வர இன்னும் மணிநேரங்கள் இருக்கும் சூழலில் தொண்டர்கள் அலை அலையாக வருவது தொடர்கிறது.

Dharapuram
Dharapuram

உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் திரண்டு வந்துள்ளனர். அவர்கள் இன்னும் சில மணிநேரங்கள் திடலுக்கு உள்ளேயே காத்திருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கான குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

என ஒலிப்பெருக்கியில் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். ஆனாலும் தடைகளை தள்ளிவிட்டு திபுதிபுவென ஓடிச்சென்று இருக்கையில் இடம் பிடிக்கின்றனர்.

திடலின் உட்பகுதியில் QR கோட் அனுமதி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு மட்டும் சோதனைக்கு பிறகே தொண்டர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 5,000 இருக்கைகளில் தொண்டர்கள் அமரவும், 5,000 தொண்டர்கள் நின்று பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கோவை விமான நிலையத்தில் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் குவிந்துள்ளனர். அங்கிருந்து தாராபுரம் செல்லும் வழி முழுவதும் தொண்டர்கள் காணப்படுகின்றனர். அவசர சிகிச்சைக்கான மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

"இவங்க இன்னும் திருந்தவே இல்லையா?.." 3 மணிக்கு வரப்போகும் முதல்வருக்கு.. மண்டையை பிளக்கும் வெயிலில்.. இப்போதே சீறிப்பாய்ந்து இடம் பிடிக்கும் தொண்டர்கள்
TVK: கேரளா முதல் மேற்கு வங்கம் வரை.. தவெக கிளைகள் உண்மை இல்லையா.. அதிகாரப்பூர்வ மறுப்புக்கு பின்னணி என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com