"நாங்கள் தூய சக்தி என்று சொன்னோமா?" மாணிக்கம் தாகூரின் அதிரடி பதில்! வைரலாகும் பேச்சால் கிளம்பும் விவாதம்

மாணிக்கம் தாகூர் பதவியேற்று சந்திக்கும் முதல் செயற்குழு கூட்டம் ஆகும்.
Manickam Tagore
Manickam TagoreManickam Tagore
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல முக்கிய புள்ளிகள் கலந்துகொண்டார்கள். மேலும், அடுத்தகட்டமாக காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற பல முக்கிய விஷயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், இது மாணிக்கம் தாகூர் பதவியேற்று சந்திக்கும் முதல் செயற்குழு கூட்டம் ஆகும்.

இதில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், தமிழ்நாடு அரசியலில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்தும் தெளிவாக அதில் பேசப்பட்டதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும், 123-வது காமராஜரின் பிறந்தநாளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெகு விமர்சையாக கொண்டாடும் என்றும் "எங்களுடைய முகம், எங்களுடைய அடையாளம், எங்களுடைய வரலாறு எல்லாமே காமராஜர்தான்" என்று அவர் மேலும் பேசினார்.

புதிய கோணத்தோடு பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை அணுகப்போவதாகவும், அதை ஒரு வாரம் கொண்டுபோவதாகவும் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இதில் மையக்கருத்தாக காமராஜரின் ஆட்சி மற்றும் வாழ்க்கையை மக்கள் மத்தியில் எடுத்து செல்லவிருப்பதாக அவர் கூறினார். மேலும், ஊழலற்ற, லஞ்சமற்ற அரசு நிர்வாகம் இதை மக்கள் மத்தியில் ஒரு இயக்கமாக எடுத்து செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கான "லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என்ற முழக்கத்தையும் அவர் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ராகுல் காந்தி வரும் ஜூலை 21ம் தேதி தமிழகம் வரவிருக்கிறாரா? என்ற கேள்விக்கு, தலைவர் ராகுல் காந்தி வருகின்ற செய்தியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதான் அறிவிக்கும் என்றும் யூகங்களுக்கும், கற்பனைக்கும் இடம்கொடுக்க வேண்டாம் என்று அவர் பேசினார். மேலும், ஊழல் செய்த பலரும் தவெக-வில் இணைகிறார்கள் அதை எப்படி தூய்மை கட்சி என்று சொல்லமுடியும்? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "நாங்க தூய்மை என்று சொன்னோமா? யார் எந்த எந்த கட்சிகளில் சேர வேண்டும் என்பதை அந்த அந்த காட்சிகள் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். நங்கள் எப்போதும் கூட்டணியில் மாண்போடு இருக்கின்ற கட்சி. மற்றவர்களை போல் நாங்கள் வெளியில் பேசுவது கிடையாது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவோம்" என்று பத்திரிகையாளர் சந்திபில் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com