"விஜய்க்குப் போட்டியாக இவரா?" - தனுஷுக்கு கதவை திறக்கும் அதிமுக! முன்னாள் அமைச்சர் பேச்சால் சலசலக்கும் அரசியல் வட்டாரம்

நடிகர் தனுஷினை இவர்கள் தங்களது கட்சிக்கு அழைக்கிறார்களா? அல்லது தனுஷ் நேரடியாக அதிமுகவில் சென்று இணையப்போகிறாரா? என்ற பல்வேறு கேள்விகளை tதூண்டி விட்டு செல்கிறது.
AIADMK
AIADMK
Published on: 
Updated on: 
2 min read

அதிமுக-வில் உட்கட்சி பூசல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்காமல் என்ன செய்வோம்?" என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, சில அதிமுக MLA-கள் தவெக-வில் இணைந்துள்ளனர். அதுவும் அரசியல் வட்டாரங்களில் பெருமளவில் பேசுபொருளானது. அதே நேரத்தில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் அதிமுக-வில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அக்கட்சி சார்பில் போட்டியிட்டு, இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் வெற்றி பெற்றது பெரும் சலசலப்பை உண்டு பண்ணியது.

இது ஒருபுறம் இருக்க, அதிமுக சி. வி. சண்முகம் மற்றும் இபிஎஸ் என்ற இருவரின் தலைமையில் இரு அணிகளாக உடைய துவங்கியது. அதன் பின்னர், அதிமுக செல்வாக்கு சரியத் தொடங்கியது என்று பரவலாகவே பேசப்பட்டது. மேலும், இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது (இடைத்தேர்தலிலும் கூட). இந்த விவகாரம் கூட அதிமுக-வில் இருந்தவர்களுக்கு அதிருப்பதியாக இருந்தது.

இவ்வாறாக அதிமுக சென்று கொண்டிருக்கும் நிலையில், அதிமுக-வில் ஏதேனும் மக்களுக்கு தெரிந்த முகம், தேவதூதனாக யாரேனும் வந்து கைகொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பேச்சு அடிபட தொடங்கியது. அப்படிப்பட்ட சூழலில்தான் "நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?" என்ற காரசார விவாதம் தமிழ் சினிமா தொடங்கி தமிழக அரசியல் வட்டாரங்கள் வரை பேசப்பட்டது.

தனுஷ் தனது ரசிகர்களை சந்தித்தது, ரசிகர் மாற்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியது, திடீரென கொடி ஒன்றினை அறிமுகப்படுத்தப்பட்டது என்று அடுத்தடுத்து செய்திகள் வந்து சூழ ஆரம்பித்தது. இப்படி இருக்க தனுஷ் புதிதாக கட்சி தொடங்குவாரா? அல்லது ஏதேனும் கட்சிக்கு ஆதரவு தருவாரா? என்ற பேச்சும் எழத் தொடங்கியது. அப்படி ஒரு சூழலில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "தனுஷ் என்ற வார்த்தை ஏழை எளிய மக்கள், இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்காமல் என்ன செய்வோம்?" என்று கூறியுள்ளார்.

அடுத்ததாக அதிமுக, அரசியலில் தனது செல்வாக்கை தக்கவைக்க 'பி' பிளான்தான் போடும் என்று பலராலும் சொல்லப்பட்டாலும் "இல்லை..இல்லை. D for தனுஷ்" என்று வந்து நிற்கிறது. ஏற்கனவே, அதிமுகவில் இருக்கும் உறுப்பினர்களும் சரி, அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர்களும் சரி அதிமுகவின் தேர்தல் வியூகங்களில் அதிருப்தியடைந்துதான் இருக்கிறார்கள். தவெக ஒருப்பக்கம், 'இதுதான் உண்மையான அதிமுக' என்று கூறுவதும், மறுபுறம் அதிமுக உட்கட்சிப்பூசல் நடந்துகொண்டிருக்க, நடிகர்கள் சிலர் ரசிகர்களை சந்தித்து அவர்களது ரசிகர் மன்றங்களை அரசியல் நோக்கி நகர்த்தி செல்வது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் அரசியல் வட்டாரத்தில் ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறாக ஒரு கருத்தினை கூறியிருப்பது, நடிகர் தனுஷினை இவர்கள் தங்களது கட்சிக்கு அழைக்கிறார்களா? அல்லது தனுஷ் நேரடியாக அதிமுகவில் சென்று இணையப்போகிறாரா? என்ற பல்வேறு கேள்விகளை தூண்டி விட்டு செல்கிறது. ஒருவேளை தனுஷ் வந்தால், அவரது ரசிகர்கள், இளைஞர்கள் என்று ஒரு குறிப்பிட்ட அளவு கூட்டத்தை அதிமுக தன் பக்கம் இழுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது (ஆனால் விஜய் அளவிற்கு அது நடக்க வாய்ப்பு குறைவுதான்).

எது எப்படியோ அதிமுக முன்னாள் அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது, சிறிது சிந்திக்கத்தான் வைக்கிறது. ஒருவேளை இது நடந்தால் கணிசமான வாக்குகளை அதிமுக, கோவை மண்டலம் மற்றுமின்றி தென் மண்டலத்திலும் பெறமுடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுபோன்ற செயல்களுக்கு 'காலம்தான் காத்திருந்து பதில் சொல்லும்', அதனால் காத்துதான் இருக்கவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com