நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு! நாலாபக்கமும் அதிமுக எம்பி-க்கு வலுக்கும் எதிர்ப்பு..

CV shanmugam
Published on
Updated on
2 min read

அதிமுக எம்பி சிவி சண்முகம், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் போது நடிகை நயன்தாராவை குறித்த பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற அரசியல் தேர்தலை நெருங்கவுள்ள நிலையில், தற்போது நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிமுக தலைமையிலான NDA கூட்டணி கட்சிகள் மாநிலம் முழுவதும் திமுக அரசை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் போது நடிகை நயன்தாரா குறித்து பேசிய விதம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்கள் தங்கள் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அவற்றை நிறைவேற்ற அரசு பாடுபடும் என்றும் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்த திட்டம் குறித்து அதிமுக எம்பி சிவி சண்முகம் விமர்சித்துக்கொண்டிருந்தார். அவர் பேசியது, ​​"தலைவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 'கனவு காணுங்கள்' என்று கூறினார். அதை முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று 'கனவுகளை சொல்லுங்கள்" என்று கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், "நயன்தாராவை விரும்புகிறேன் என்று யாராவது சொன்னால், அவர் (ஸ்டாலின்) கனவை நிறைவேற்றுவாரா?" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவருக்கு அருகில் நின்றிருந்த மற்ற கட்சி தொண்டர்கள், அந்தக் கருத்துக்களை ஆமோதிப்பது போல் செரித்துகொன்றிருந்தனர்.

மேலும், இவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சிற்கு, திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது 'X' தளப்பக்கத்தில்,"அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண், என்று கனிமொழி தெரிவித்துள்ளார். அது போல் ஜோதிமணி எம்பியும் தனது 'X' தளத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். "அதிமுகவின் திரு. சி. வி. சண்முகம் திருமிகு. நயன்தாரா அவர்கள் குறித்துப் பொதுவெளியில் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்திற்குரியது. ஒரு பெண்ணை பொதுவெளியில் இப்படி அப்பட்டமாக ,ஆபாசமாகப் பேசுவதை நாம் இயல்பாகக் கடந்து போய்விட முடியாது. திரைத்துறையில் ஒரு வெற்றிகரமான பெண், இன்னொருவரின் மனைவி, இரண்டு குழந்தைகளின் தாய் பல்வேறு போராட்டங்களைக் கடந்து,தொடர்ந்து பயணிக்கும் ஒரு பெண்ணை மிகவும் மோசமான பார்வையோடு அணுகுவது,பேசுவது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. சட்டப்படியும் தவறு. அரசியல் மேடைகளில் பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை ஆபாசமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

பல்வேறு தடைகளை,போராட்டங்களைக் கடந்து தான் சார்ந்த துறைகளில் வெற்றிகரமாகப் பயணிக்கும் பெண்களை மீண்டும் மீண்டும் உடலாக மட்டுமே பார்க்கும், அவமதிக்கும் மனநிலையை நாம் ஒரு சமூகமாக கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பெண்கள் பொதுவெளியில் பாதுகாப்பாகவும்,கண்ணியமாகவும் உணர முடியும்.திரு. சி.வி சண்முகம் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதனை எதிர்த்து தென்னிந்திய நடிகர் சங்கமும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. மேலும், தற்போது குஷ்பு, அதிமுக எம்பி சிவி சண்முகம் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மலிவு நகைச்சுவைக்கு ஒரு பெண்ணின் பெயரை பயன்படுத்தாதீர்கள் என்றும், நடிகைகள் பொதுமக்கள் அறிந்த நபராக இருக்கலாம், ஆனால் அவர்கள் பொது சொத்து அல்ல, என்று காட்டமாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

பெண்களை பொருளாக பாவிக்கும் இவரது சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்புகள் வந்தவண்ணம் இருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com