விஜய்க்கு ஆதரவாக எழுந்த கம்யூனிச குரல்கள்! - தவெக ஆட்சியமைப்பது எப்போது?

ஆளுநரின் செயல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்றும் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றத்தில்தானே தவிர, ஆளுநர் மாளிகையில் இல்லை.
விஜய்க்கு ஆதரவாக எழுந்த கம்யூனிச குரல்கள்
விஜய்க்கு ஆதரவாக எழுந்த கம்யூனிச குரல்கள்விஜய்க்கு ஆதரவாக எழுந்த கம்யூனிச குரல்கள்
Published on
Updated on
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவி ஏற்பதில் தாமதம் நீடித்து வரும் நிலையில் தற்போது பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். தற்போது, தவெக தலைவர் விஜய் பதவியேற்க காலதாமதம் இன்றி அனுமதிக்கவேண்டும் என்று சிபிஎம் சார்பாக வலியுறுத்தியுள்ளது. 112 MLA-க்கள் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவேண்டும் என்று விஜய் தெரிவித்த நிலையில், 118 MLA-க்களை நிரூபித்தால் மட்டுமே பதவி பிரமாணம் செய்துவைக்க முடியும் என்று ஆளுநர் கூறினார்.

முன்னதாக கமல், "பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும் ராஜ்பவனில் அல்ல", என்று தவெக தலைவருக்கு ஆதரவாக கமல்ஹாசன் அறிக்கை வெளியுள்ளார். இவரைத்தொடர்ந்து, "தவெக ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளது. ஆளுநரின் செயல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்றும் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றத்தில்தானே தவிர, ஆளுநர் மாளிகையில் இல்லை. ஆளுநர் உடனடியாக தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ளார். "தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழ்நாடு ஆளுநரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியலமைப்புக்கு முரணானது என்றும் மக்களின் தீர்ப்பை விஜய் பெற்றுள்ளார். அவையில் தனது உரிமையை நிலைநாட்ட அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்" என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இவர்களைத்தொடர்ந்து, "பதவி ஏற்புக்கு முன்பு தவெக, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல. அரசியலமைப்பு சட்டத்தை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும். தவெக தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை. "விஜய் பதவியேற்க தாமதமின்றி ஆளுநர் அனுமதிக்க வேண்டும். தனிபெரும்கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க விஜய் மட்டுமே உரிமை கோரியுள்ளார். வேறு யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில் விஜய்யை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுக்கவேண்டும். ஆளுநர் மூலம் அரசமைப்புக்கு விரோதமாக தனது நோக்கத்தை நிறைவேற்றும் அணுகுமுறையை பாஜக கடைபிடிக்கிறது" என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார். தற்போது பெரும்பான்மை இல்லாமல் விஜய் எவ்வாறு ஆட்சியமைப்பார்? என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com