“சென்னைக்கு மிக அருகில் முரசு புயல்.. நள்ளிரவு முதல் ஆட்டம் ஆரம்பம்" - மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் வீசப்போகும் காற்று! என்ன நடக்கும்?

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, தமிழகத்தில் வட கடலோர பகுதிகளில் காற்றானது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை உள்ள வேகத்திலும், அவ்வப்போது 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Chennai heavy rain forecast
Chennai heavy rain forecast
Published on: 
Updated on: 
2 min read

'முரசு புயல்' தற்போது சென்னைக்கு மிக அருகில் இருப்பதாகவும், புயல் தீவிரமடைவதால் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'முரசு' புயல் தீவிரப் புயலாக வலுபெற்று வரும் நிலையில், சென்னை கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாக எச்சரிக்கைக்கு விடுக்கப்பட்டது. இதன் காரணமாக, 'பொதுமக்கள் யாரும் கடலில் இறங்க வேண்டாம்' என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இந்த 'முரசு புயல்' ஆந்திராவில் கரையை கடக்கும் என கூறப்படும் நிலையில், சென்னைக்கு அருகில் இந்த புயல் இருப்பதால் நாளை காலை வரை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார், மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, தமிழகத்தில் வட கடலோர பகுதிகளில் காற்றானது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை உள்ள வேகத்திலும், அவ்வப்போது 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்த காற்றின் வேகம் இன்று மாலை முதல் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை உள்ள வேகத்திலும், அவ்வப்போது 80 கிலோமீட்டர் வேகத்திலும் அதிகரிக்கக்கூடும் என்றும் நாளை மாலை வரை இந்த காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் மீனவர்கள் தமிழகத்தில் வட கடலோர பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரித்துள்ளார். இதனைத்தொடர்ந்து புயல் கரையை கடந்ததும் காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.

சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் அதாவது இன்று முதல் நாளை காலை வரை கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையை கடந்த பிறகு, கனமழையின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் புயலானது நெல்லூருக்கும் - நரசாபுரம் இடையே புயல் கரையை கடக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் நவம்பர் 1ம் தேதி வரை பதிவான மழை 22 செ.மீ, இயல்பான மழை 19 செ.மீ, இது இயல்பிலிருந்து 18% அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ முதல் 110 கி. மீ வரை காற்று வீசும் என எச்சரிக்கைவிடுத்துள்ளார். தற்போது 'முரசு புயல்' சென்னைக்கு மிக அருகில் இருப்பதாகவும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நவம்பர் 7ம் தேதிக்கு பிறகு தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது, அக்டோபரில் உருவாகின்ற புயல்கள் ஆந்திராவை நோக்கியும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உருவாகும் புயல்களானது தமிழகத்தை நோக்கியும் வரும் எனவும் தெளிவுப்படுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.