"விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வைத்தாரா தேர்தல் அலுவலர்?" - வாக்குசாவடில் நடந்த வாக்குவாதம்! மூதாட்டி ஓட்டில் நடந்த குளறுபடி

மூதாட்டி திமுகவிற்கு வாக்களிக்க கோரினார் என்றும் நீங்கள் எதற்காக இரண்டாவது பட்டனை அழுத்தினீர்கள்
Dharapuram by-election 2026
Dharapuram by-election 2026
Published on: 
Updated on: 
1 min read

தாராபுரம் இடைதேர்தலானது காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் 9 மணி நிலவரப்படி 17.55% வரை வாக்கு பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தாராபுரம் கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர் மூதாட்டி ஒருவரை விசில் சின்னத்திற்கு வாக்களிக்கவைத்ததாக பரபரப்பு குற்றசாட்டு எழுந்துள்ளது.

2026 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரத்தில் சத்யபாமாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில், அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் தங்களை இணைத்து கொண்டனர். அதன் பின்னர் அந்த தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தாராபுரத்தில், தவெக சார்பில் சத்யபாமா, அதிமுக சார்பில் பானுமதி, திமுக சார்பில் சுகன்யா, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாதக சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தாராபுரத்தில் 1,07,285 ஆண்களும், 1,16,013 பெண்களும், 8 மூன்றாம் பாலினத்தவர்களும் என்று மொத்தம் 2,23, 306 வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தாராபுரம் கொழிஞ்சிவாடி பகுதி 137 வாக்குச்சாவடியில் மூதாட்டி ஒருவர் முதல் பட்டனை அழுத்த கோரி கூறியதற்கு, தேர்தல் நடத்தும் அதிகாரி இரண்டாவது பட்டனை அழுத்தியதாக கூறப்படும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.

"மூதாட்டி திமுகவிற்கு வாக்களிக்க கோரினார்" என்றும் "நீங்கள் எதற்காக இரண்டாவது பட்டனை அழுத்தினீர்கள்" என்று கூறி வாக்குசாவடியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது . இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியதால் வாக்களிப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கபட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், "இதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்" என்று அனைவரையும் அனுப்பி வைத்து பேசிய பிறகு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்று நடைபெற்றது.

மேலும், இந்த சம்பவம் குறித்து வாக்குச்சாவடியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பெலிக்ஸ் ராஜா உறுதியளித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com