"திமுகவா.. தவெகவா..யார் அது?" - வைரலாகும் சத்யபாமா வீடியோ! வாக்களிக்க வந்த இடத்தில் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

பணம் செலவளித்ததாக கூறுவதும், சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்துவதுமாக இருந்த அந்த வீடியோ-வில் காணப்பட்டது.
TVK Sathyabama
TVK Sathyabama
Published on: 
Updated on: 
1 min read

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளராக சத்யபாமா அறிவிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட கட்சியை குறித்து அவர் பேசியதாக ஒரு வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், அது சித்தரிக்கப்பட்டது என்று சத்தியபாமா தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா வெற்றிபெற்ற நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தார். மேலும், தவெக சார்பில் மீண்டும் அவரே தாராபுரம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாராபுரத்தில், தவெக சார்பில் சத்யபாமா, அதிமுக சார்பில் பானுமதி, திமுக சார்பில் சுகன்யா, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாதக சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், தாராபுரத்தில் 320 வாக்குசாவடிகளில், 18 வாக்குசாவடிகளும் பதற்றமானவை என்பதால் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தாராபுரத்தில் 1,07,285 ஆண்களும், 1,16,013 பெண்களும், 8 மூன்றாம் பாலினத்தவர்களும் என்று மொத்தம் 2,23, 306 வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகத்தில் 1,04,926 ஆண்களும், 1,08,797 பெண்களும், 65 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 2,13,788 பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்றிலிருந்து சமூகவலைத்தளத்தில் சத்யபாமா பேசியதாக ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பணம் செலவளித்ததாக கூறுவதும், சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்துவதுமாக இருந்த அந்த வீடியோ-வில் காணப்பட்டது. மேலும், அவர் திமுக-வை குறிப்பிடுகிறாரா? அல்லது தவெக-வை குறிப்பிடுகிறாரா? என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

இதனையடுத்து, இன்று (அக் 06) தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், சத்யபாமா வாக்களித்துவிட்டு வெளியே சென்றபோது செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினர். அப்போது அந்த வீடியோ குறித்து பேசிய அவர், "அது சித்தரிக்கப்பட்ட வீடியோ; மக்கள் தெளிவாக உள்ளனர்; இது தேர்தலில் எதிரொலிக்காது" என்று தான் பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது குறித்து வாக்களித்தப் பின் தவெக வேட்பாளர் சத்தியபாமா விளக்கமளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com