``அப்படி எந்த செயலும் நடக்கவில்லை" - MLA அருள் விக்னேஷை காப்பாற்றினார்களா அமைச்சர்கள்? - இதுவரை பேசியது என்ன?

முதலமைச்சர் விஜய்யும் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களும் அருள் விக்னேஷைக் காப்பாற்றி வந்தது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றன.
Did Ministers Protect MLA Arul Vignesh? What Have They Said So Far?
``அப்படி எந்த செயலும் நடக்கவில்லை" - MLA அருள் விக்னேஷை காப்பாற்றினார்களா அமைச்சர்கள்? - இதுவரை பேசியது என்ன?
Published on: 
Updated on: 
2 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "ஜூலை மாதமே அரசுக்குத் தகவல் தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" எனக் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யும் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களும் அருள் விக்னேஷைக் காப்பாற்றி வந்தது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றன.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக இப்போது மௌனமாக இருக்கும் அமைச்சர்கள் இதுவரை பேசியது என்ன என்று பார்க்கலாம்.

இந்த மாதத் தொடக்கத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிர் அணித் தலைவருமான கனிமொழி கேள்வி எழுப்பினார்.

நவம்பர் 10ஆம் தேதி, தீபாவளி தினத்தில் நடந்த கொலைகள் குறித்த விமர்சனத்துக்குச் செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்தார் அமைச்சர் ராஜ்மோகன். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

"ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல், புகாரில் உண்மை இருந்தால் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும்" எனப் பதிலளித்தார் அவர்.

நவம்பர் 12ஆம் தேதி பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "கனிமொழி அவர்கள், ஒரு பெண் தொடர்பான விவகாரத்தைச் சமூக ஊடகங்களில் பார்த்ததாகக் கூறிப் பதிவு செய்தது தவறு. அரசியல் ஆக்குவதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. எல்லா வதந்திகளுக்கும் நாங்கள் பதில் சொல்ல முடியாது. யாருடைய தனிப்பட்ட விவகாரத்தையும் பேச எனக்கு அதிகாரம் கிடையாது. கனிமொழி சொன்னது மாதிரி எந்தச் செயலும் நடக்கவில்லை" என வெளிப்படையாகவே மறுத்துப் பேசினார்.

நவம்பர் 13ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, "பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாதிக்கப்பட்டோரின் பக்கமே நிற்கும். முழுமையான விவரங்கள் தெரிந்த பிறகு இதுகுறித்து எங்கள் தரப்பைத் தெரிவிப்போம்" எனப் பேசினார்.

இதன்பிறகு, நவம்பர் 16ஆம் தேதி வன்னி அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியது. அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "அமைச்சர்கள் இது தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிப்பது விசாரணையைப் பாதிக்கும். ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்" எனப் பேசினார்.

நவம்பர் 23ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், "இந்த விவகாரம் முதல்வரின் கவனத்தில் உள்ளது; உண்மை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பேசினார்.

இப்படியாக, அமைச்சர்கள் இந்த விவகாரம் குறித்து உறுதியாக மறுக்கவும் இல்லாமல், அதேவேளையில் அரசு தரப்பில் தீவிர விசாரணையும் மேற்கொள்ளாமல் கடத்தி வந்துள்ளனர்.

விவகாரம் முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டும், நீதிமன்றம் தீவிரமாக விசாரிக்கும் வரை அவர் கைகட்டி வேடிக்கை பார்த்தது பொதுமக்களைக் கவலையடையச் செய்திருக்கிறது.

Did Ministers Protect MLA Arul Vignesh? What Have They Said So Far?
"அருள் விக்னேஷ் உடனடியாக கைது.. அமைச்சர்கள் மீது நடவடிக்கை.. முதல்வர் விஜய்யின் அணுகுமுறை இழிவானது" - சீமான் வலியுறுத்தல்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்