திமுகவையே விமர்சித்த மு.க. ஸ்டாலின்?.. AI வீடியோவை டெலிட் செய்ததா 'TVK ஐடி விங்'? ட்விட்டரில் பற்றிய நெருப்பு.. நீதிமன்றம் வரை செல்லும் எதிர்க்கட்சி!

"கேடுகெட்ட த.வெ.க ஆட்சியில் கள்ளத்தனமான வேலைகளே நடைபெறுகின்றன. தலைவர் (ஸ்டாலின்) பதிவிட்ட வீடியோவில், குரலை மட்டும் மாற்றி, அருவருக்கத்தக்க அவதூறுக் கருத்துகளை பதிவிட்டு, தாங்கள் எவ்வளவு கேடுகெட்டவர்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்கள்."
MK Stalin in the AI Video
திமுகவையே விமர்சித்த மு.க. ஸ்டாலின்?.. AI வீடியோவை டெலிட் செய்ததா 'TVK ஐடி விங்'? ட்விட்டரில் பற்றிய நெருப்பு.. நீதிமன்றம் வரை செல்லும் எதிர்க்கட்சி!
Published on: 
Updated on: 
2 min read

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் உருவத்தையும் குரலையும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றி, அவரது மனசாட்சி பேசுவதாகக் கற்பனை செய்து உருவாக்கப்பட்ட காணொளி ஒன்றை தவெக ஐடி விங் வெளியிட்டது.

அந்தக் காணொளியில், ஸ்டாலின் திமுகவுக்கு எதிரான கருத்துகளையும் தவெகவுக்கு ஆதரவான கருத்துகளையும் தெரிவிப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. உண்மையான காணொலியா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என அறிய முடியாத அளவுக்கு அது தத்ரூபமாக அமைந்திருந்தது.

சிறிது நேரத்திலேயே வைரலான அந்தக் காணொளிக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. "தலைவர் (ஸ்டாலின்) அவர்களின் காணொலியில், தீய நோக்கத்துடன் அவரது குரலை மாற்றி, அவர் பேசாததைப் பேசியதுபோல் சித்தரிக்கும் போலி AI காணொலியை TVK IT Wing வெளியிட்டுள்ளது.

இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல. திட்டமிட்ட டிஜிட்டல் ஆள்மாறாட்டம் மற்றும் அவதூறான செயல்" எனக் கூறி திமுக சட்டத்துறை கண்டித்தது.

மேலும் இது தொடர்பாக காவல்துறை மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளிப்பதாகக் கூறியது.

இந்த நிலையில் வீடியோ டெலிட் செய்யப்பட்டதாக சிலர் கூறி வந்தனர்.

ஆனால் அந்த வீடியோ தவெக ஐடி விங் பக்கத்தில் இருக்கிறது.

இன்று திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் இந்த வீடியோவைக் கண்டித்ததுடன், தவெக-வை கடுமையாக விமர்சித்துள்ளது.

இது குறித்த பதிவில், "கேடுகெட்ட த.வெ.க ஆட்சியில் கள்ளத்தனமான வேலைகளே தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த ஆட்சியில் அன்றாடம் தொடரும் அவலங்களுக்கு எதிராக தி.மு.க மகளிரணி நடத்தும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேற்று கழகத் தலைவர் அவர்கள் பதிவிட்ட வீடியோவில், அவருடைய குரலை மட்டும் மாற்றி, அருவருக்கத்தக்க அவதூறுக் கருத்துகளை த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு, தாங்கள் எவ்வளவு கேடுகெட்டவர்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

பொதுமக்களிடம் தவறான கருத்துகளைப் பதிய வைக்கும் த.வெ.க.வின் இந்தக் கள்ளத்தனமான செயல்பாடுகள் குறித்து கழக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இ.பரந்தாமன் தமிழ்நாடு காவல்துறையிடம் புகார் மனு அளித்திருக்கிறார். குற்றவியல் சட்டப் பிரிவுகள், தகவல்தொழில்நுட்ப சட்டப் பிரிவுகள், சைபர் கிரைம் சட்டப் பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் இந்தக் கள்ளத்தன வீடியோவைப் பதிவு செய்தவர்கள் மற்றும்அதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை பாரபட்சமின்றியும் அதிகாரத்திற்கு வளையாமலும் தன் கடமையைச் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

அரசியல் மாண்போ, அறிவோ இல்லாத கூட்டத்திடம் தமிழ்நாடு சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், பொதுமக்கள் பக்கம் நின்று அதைத் தட்டிக் கேட்டும் வலிமையுள்ள ஒரே இயக்கமான தி.மு.க.வை தனது இழிசெயல்களால் சிறுமைப்படுத்த நினைக்கும் த.வெ.க.வின் முயற்சிகள் அனைத்தும் உறுதியான சட்ட நடவடிக்கைகளால் முறியடிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மூலம் மட்டுமின்றி, நீதிமன்றம் வாயிலாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வெல்லும்." எனத் தெரிவித்துள்ளனர்.

MK Stalin in the AI Video
``திமுக ஆதரவுடன் சீமான்?" அம்பாசமுத்திரத்தில் ஸ்டாலின் போடும் 'புள்ளிவிவரக் கணக்கு'.. ரிஸ்க் எடுக்குமா நாதக? தனி ரூட்டில் EPS!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.