

டித்வா புயல் காரணமாக தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை நீடித்து வரும் நிலையில் இன்று திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காலை முதல் சென்னை திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவித்திருந்த நிலையில் மேலும் மக்களுக்கு கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை வரையிலும் கனமழை நீடிக்கும் என கூறியுள்ள நிலையில் நாளையும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது மேலும் சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையத்தில் 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியுள்ளது மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகமாக துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து டித்வா புயல் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் வடதமிழக கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை பரவலாக மழை பெய்யக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னை வந்தடையும் எனவே கனமழைக்கான வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேகக் கூட்டங்கள் அதிகமான காரணத்தால் சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று மாலை நான்கு மணி வரை மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.