“திமுகவுடன் கைகோர்த்த தேமுதிக” - 21 ஆண்டுகளில் முதல் முறையாக இணையும் கூட்டணி!

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது தேமுதிக திமுகவுடன் கூட்டணி...
“திமுகவுடன் கைகோர்த்த தேமுதிக” - 21 ஆண்டுகளில் முதல் முறையாக இணையும் கூட்டணி!
Published on
Updated on
1 min read

சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு குறித்த விவாதங்கள் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. அதிமுக மற்றும் திமுக தங்களது கூட்டணியை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில் தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் இருந்தனர். மேலும் அவர்கள் கடந்த தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பங்கு வகித்த நிலையில் இந்த ஆண்டும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் கடலூரில் நடந்த தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும் என கூறிய இலையில் மனதின் போது கூட்டணி குறித்து அறிவிக்காமல் “தேமுதிக நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும் அதனை விரைவில் அறிவிப்போம்” என தெரிவித்து தொடர்ந்து கூட்டணி குறித்து நிலைப்படை தெரிவிக்காமல் இருந்து வந்தார். கடந்த மாதம் நடந்த கேப்டன் ஜெயந்தி விழாவில் திமுகவின் சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கலந்து கொண்ட நிலையில் அரசியல் வட்டாரங்களில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் இது குறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா “அனைவரும் கேப்டன் மீது இருந்த மரியாதையில் கேப்டன் ஜெயந்தியில் கலந்து கொண்டனர் கூட்டணி குறித்து மாவட்ட செயலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார். ஏற்கனவே திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்து மறைமுகமாக தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைத்திருந்தார். மேலும் இதற்கிடையில் திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி விரைவில் புதிய காட்சிகள் திமுக கூட்டணியில் இணையும் அதற்கான பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார்.

இதை எல்லாம் வைத்து தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்த நிலையில் கடந்த வாரம் தேமுதிக அதிமுகவுடனே மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளது. மோடி தமிழகம் வரும்போது இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று தேமுதிக திமுக உடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. இன்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரேமலதா திமுக கூட்டணியில் இணைந்தார். தேமுதிக தொடங்கியதிலிருந்து முதன்முறையாக தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com