
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், ஆகியோர் முதலமைச்சரை சந்தித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முத்தரசன் “ஆணவ படுகொலைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவது ஆபத்தானது, இதற்கு தனி சட்டம் வேண்டும் என்பதை முதலமைச்சருக்கு எடுத்துரைத்திருக்கிறோம்” என கூறியுள்ளார்.
மேலும் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆணவப் படுகொலை என்பது குறிப்பிட்ட சாதியினருக்கும் அந்த சாதியில்லாதவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனை மட்டும் அல்ல, இது ஒரு சமூக பிரச்சனை இது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் நடக்கிறது. தமிழக அரசு முடிந்த வரை நடவடிக்கை எடுத்து கொண்டு தான் இருக்கிறது நாங்கள் அதை நம்புகிறோம், சாதி மத அடிப்படையில் தமிழக மக்கள் வாக்களிப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.