
சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் அருகே உள்ள நாகிரெட்டி தோட்டம் பகுதியில் நேற்று இரவு 5 பேர் கொண்ட கும்பல் கஞ்சா புகைத்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் 33 வயதான வங்கி ஊழியராக பணியாற்றி வரும் ஜானகிராமன் பணி முடிந்து வீடு திரும்பி உள்ளார். இந்நிலையில் தனது வீட்டிற்கு அருகில் அமர்ந்து கஞ்சா புகைத்து கொண்டிருந்த நபர்களை கண்டித்து வேறு இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனை காதில் வாங்காத கஞ்சா கும்பல் தொடர்ந்து ஜானகிராமன் வீட்டிற்கு அருகில் அமர்ந்திருந்துள்ளனர். எனவே ஜானகிராமன் அவர்களிடம் சத்தம் போட அந்த கும்பலுக்கும் ஜானகிராமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. போதையின் உச்சத்தில் இருந்த அந்த கும்பல் வாக்குவாதம் முற்றிய ஆத்திரத்தில் ஜானகிராமனை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். ஜானகிராமனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இது குறித்து போலீசில்புகாரளித்த அப்பகுதி மக்கள், இந்த பகுதியில் கஞ்சா புகைப்பவர்கள் அதிகமாக உள்ளதால் சாலையில் நடக்க முடியவில்லை எனவும் பள்ளிகளுக்கு குழந்தைகளை கூட அழைத்துச் செல்ல முடியவில்லை எனவும் தொடர்ந்து இது போன்ற குற்ற சம்பவங்கள் அரங்கேறுவதால் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கவும் பயமாக உள்ளது. மேலும் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து கிண்டி ஜே3 காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த அரிவாள் வெட்டிற்கு வாக்குவாதம் தான் காரணமா, அல்லது கஞ்சா கும்பலுக்கு ஜானகிராமனுடன் ஏதேனும் முன்பு இருந்து அதன் காரணமாக வெட்டப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலில் அதிக காயங்கள் ஏற்பட்டதால் சைதாப்பேட்டை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஜானகிராமனை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.