திமுக கூட்டணி பலமாக இல்ல.. “விசிக - காங்கிரஸ் விஜய்கூட போறாங்க..” -நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு !!

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயை ராகுலை காந்தி தொடர்புகொண்டு பேசினார். அதன் பிறகு ராகுல் காந்தியின் நெருக்கமான...
tvk vs dmk
tvk vs dmk
Published on
Updated on
2 min read

வருகிற 2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர். அரசியல் விமர்சகர்கள். 

ஆனால் தமிழகத்தின் பிரதான கட்சிகளான, திமுக அதிமுக -வின் கூட்டணிகளுக்குள் உள்கட்சி பூசல்கள் நிச்சயம் உள்ளன. மேலும், அதிமுக -வின் உள்கட்சி விவகாரம் ஊரறிந்த ஒன்றாக ஆகிவிட்டது. திமுக கூட்டணி வலிமையான ஒன்றாக தென்பட்டாலும், அது உண்மையில் அப்படி இல்லை. அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அதிக சீட்டுகளுக்கான நெருக்கடியை கொடுக்க துவங்கிவிட்டனர். மேலும், பீகார் தோல்வி அவர்களுக்கு நிச்சயம் ஒரு பதற்றத்தை கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

50 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட கட்சியான காங்கிரஸ் பீகார் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாதவகையில் காங்கிரஸ் அம்மாநிலத்தில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. வெறும் 5 இடங்களை மட்டுமே காங்கிரஸ் தனது கையில் வைத்திருக்கிறது. இது கட்சி ரீதியாகவே மிகப்பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. மேலும் இது தமிழகத்திலும் எதிரொலித்தால் காங்கிரசிற்கு மிகப்பெரும் பின்னடைவாக அமையும் எனக்கூறப்பட்டது .

பீகார் தேர்தலில் காங்கிரசின் தோல்வி நிச்சயம் திமுக கூட்டணியில் எதிரொலிக்கும் என உறுதியாக சில விமர்சகர்கள் கூறியிருந்தனர். இன்னும் சொல்லப்போனால் பீகாரில் அவர்கள் அடைந்த தோல்விக்காக தமிழகத்தில் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அதுவும் அதிமுக -வினரால் அல்ல திமுகவினரால் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் திமுக -வில் கரைந்துவிட்டது என்பதுதான் உண்மை. ஆனால் காங்கிரசின் இளம் எம்.பி -கள் இந்த போக்கை விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.. மேலும் காங்கிரசும் எம்.பி ஜோதி மணி ஒரு அடி அதிகம் போய்.. “விஜய் ஒன்றும் எங்கள் கட்சிக்கு புதியவர் அல்ல என காங்கிரஸ்” என பேசியிருந்தது, அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தியது.

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயை ராகுலை காந்தி தொடர்புகொண்டு பேசினார். அதன் பிறகு ராகுல் காந்தியின் நெருக்கமான நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி அடிக்கடி விஜயை சந்தித்தாகக் கூறப்பட்டது. ஆனாலும்,  இருதரப்பும் அமைதிகாத்து வந்த நிலையில், தற்போது விஜயை பிரவீன் காந்தி சந்தித்து பேசியது உறுதியாகியுள்ளது. மேலும்  “விஜயை சந்தித்தது உண்மைதான் எனவும், என்ன பேசினோம் என்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது” எனவும்  சில தினங்களுக்கு முன்னர் பேசியிருந்தார்.

ஆனால் இதுகுறித்து தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேள்வி எழுப்பியபோது, “இதுகுறித்து தனக்கு தெரியாது” என பேசியிருந்தார்.

விசிக -வின் நிலைப்பாடு!!

விசிக சித்தாந்த ரீதியாக தமிழக வெற்றிக்கழகத்துடன் ஓரளவுக்கு ஒத்துபோனாலும், விஜய் -உடன் இணைவது கடினம் என்றுதான் சொல்லப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் கூட பாஜக -வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த திருமாவளவன், பாஜக -வை ‘soft’ -ஆக அட்டாக் செய்யும் விஜயுடன் இணைய மாட்டார் என்றே சொல்லி வருகின்றனர். மேலும் திமுக கூட்டணியை விட்டு விலகப்போவதில்லை என திருமாவும் உறுதிபட கூறியுள்ளார்.

இந்த சூழலில்தான், தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருவள்ளூரில் பரப்புரை மேற்கொண்ட போது, “தமிழகத்தில் திமுக கூட்டணி வலிமையாக இல்லை, காங்கிரஸ் மற்றும் விசிகவினர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை நடத்துகிறது"  என பேசியுள்ளார். இவரின் பேச்சால் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திமுக -வின் வலிமையான கூட்டணி உடைந்துவிடுமா என்ற கேள்விக்கு தேர்தல் நேரத்தில்தான் பதில் கிடைக்கும் என்கின்றனர் சில விமர்சகர்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com