“36 தொகுதிகளை கேட்கும் காங்கிரஸ்!” - தங்கள் தரப்பில் நிலைப்பாட்டுடன் இருப்பதாக தகவல்… தொகுதி பங்கீட்டில் திமுகவிற்கு நெருக்கடியா?

இதனை தொடர்ந்து திமுகவினர் சிலர் காங்கிரஸ் எம்பிகளை தொடர்ந்து விமர்சித்து வந்தனர்...
“36 தொகுதிகளை கேட்கும் காங்கிரஸ்!” - தங்கள் தரப்பில் நிலைப்பாட்டுடன் இருப்பதாக தகவல்… தொகுதி பங்கீட்டில் திமுகவிற்கு நெருக்கடியா?
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தனது கூட்டணிகளை உறுதி செய்யும் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். வலுவான கூட்டணி என சொல்லப்பட்டு வந்த திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் கடந்த சில மாதங்களாகவே விரிசல் விழுந்ததாக விமர்சித்து வந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி விஜய் சந்தித்து பேசு பொருளாக மாறியது மேலும் காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி அமைக்க மறைமுக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் பல தகவல் வெளியாகின.

அதனை தொடர்ந்து விஜய்யின் ‘ஜனநாயகம்’ படத்தின் தணிக்கை வரியா சான்றிதழ் வழக்கில் காங்கிரஸ் எம்பிக்கள் விஜய்க்கு சாதகமாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராகுல்காந்தியும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவு தெரிவித்து மோடியை நேரடியாக டேக் செய்து பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து திமுகவினர் சிலர் காங்கிரஸ் எம்பிகளை தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

மேலும் மாறி மாறி இரு கட்சியினரும் பொதுவெளியில் ஒருவருக்கு ஒருவரை விமர்சித்து வந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் திமுக மேலிடத்தில் இருந்து இனி யாரும் கூட்டணி குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச திமுகவின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி டெல்லிக்கு சென்றிருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் தரப்பில் இருந்து 36 தொகுதிகளும் மூன்று அமைச்சர்களும் கேட்டு உள்ளதாகவும், ஆனால் திமுகவின் தரப்பில் இருந்து 30 தொகுதிகள் மற்றும் 3 அமைச்சர்கள் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த நிலைப்பாட்டில் காங்கிரஸ் மேலிடம் சமரசம் செய்து கொள்ள தயாராக இல்லை எனவும் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கவே 36 தொகுதிகள் கேட்டு திமுகவிற்கு நெருக்கடி கொடுப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com