திமுக நிர்வாகிக்கு கத்திக்குத்து.. தவெக நிர்வாகியின் கணவர் மீது புகார்! பொள்ளாச்சியில் நடந்தது என்ன?

இதுகுறித்து காவல் துறையினர் முறையாக வழக்கு பதிவு செய்துள்ளனரா? என தெரியவில்லை. மது ஒழிக்கப்படும் என்று கூறும் தவெக அரசு
திமுக நிர்வாகிக்கு கத்திக்குத்து.. தவெக நிர்வாகியின் கணவர் மீது புகார்! பொள்ளாச்சியில் நடந்தது என்ன?
Published on: 
Updated on: 
1 min read

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி ஜோதி நகர் செங்குட்டுவன் வீதியில் வசித்துவரும் தவெக நிர்வாகி சண்முக பிரியாவின் கணவன் வெல்லமண்டி சீனிவாசன். அதே பகுதியில் வீட்டின் எதிரே வசிக்கும் பிரபு என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சண்முக பிரியா மற்றும் அவரின் கணவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும், பிரபுவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் பிரபுவின் நண்பர் சூளேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த திமுக கிளைக் கழக செயலாளர் ரஃபிக் (அப்துல் முனாப்) மற்றும் பிரபுவின் தந்தை ராஜகோபால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த பொழுது சீனிவாசன் அவர்கள் இருவரையும் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கூர்மையான ஆயுதத்தால்  தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகி ரஃபிக் (எ) அப்துல் முனாப், பிரபுவின் தந்தை ராஜகோபால் ஆகிய இருவருக்கும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் குட்டி (எ) சுதாகர் பாதிக்கப்பட்டவர்களை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசியவர், “இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருக்கும் பொழுது 8 மணிக்கு மது போதையில் தவெக நிர்வாகி கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் முறையாக வழக்கு பதிவு செய்துள்ளனரா? என தெரியவில்லை. மது ஒழிக்கப்படும் என்று கூறும் தவெக அரசு அதிகாலையிலையே மது தாராளமாக கிடைப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், வருங்காலத்தில் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்