``Reddy Gang உடன் சேர்ந்து நள்ளிரவில் முடிவு.. " - CM விஜய் 'தமிழ்நாட்டுக்கு விரோதமாக' உத்தரவிட்டதாக அப்பாவு குற்றச்சாட்டு!

"தற்போது மாநில அரசின் உரிமைகளான #கல்வி, #கனிமவளம், #மீன்பிடிக்கும் உரிமைகள் மற்றும் GST வரி விதிப்பு ஆகியவற்றை தொடர்ந்து ஒன்றிய அரசு பறித்து வருவதை தடுக்கத்தான் "குரியன் ஜோசப்" தலைமையில் குழு... என்பதை படித்து புரிந்துகொள்ள முடியவில்லையா CM Sir?" - அப்பாவு கேள்வி
 Reddy Gang's Midnight Plot: Appavu Accuses CM Vijay of Anti-Tamil Decisions
``Reddy Gang உடன் சேர்ந்து நள்ளிரவில் முடிவு.. " - CM விஜய் 'தமிழ்நாட்டுக்கு விரோதமாக' உத்தரவிட்டதாக அப்பாவு குற்றச்சாட்டு!
Published on: 
Updated on: 
1 min read

திமுக அரசு மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை ஆராய அமைத்த குரியன் ஜோசப் குழுவை தவெக அரசு களைத்துள்ளது. இந்த நடவடிக்கை கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் திமுக மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான அப்பாவு முதலமைச்சர் விஜய்யை கடுமையாக சாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "#தமிழும் #தமிழனும் வா'ழ்ந்து கொண்டிருப்பதற்கு இரு மொழிக் கொள்கை, சாமானியனும் மருத்துவம், பொறியியல் பட்டம் பெற 69% இட ஒதுக்கீடு சுதந்திர தினத்தன்று முதல்வர் கோட்டையில் கொடியேற்றும் உரிமை,ஆளுனர் சட்டமன்ற மசோதாவை 3 மாதத்தில் முடிவெடுக்கும் உரிமை இவையெல்லாம் #திமுக சமூகநீதிக்கொள்கையால் ஒன்றிய அரசிடமும்,உச்சநீதி மன்றத்திலும் போராடிப் பெற்றுத்தந்த உரிமை என்பதை மறந்துவிட்டீர்களா CM Sir?

அதே வழியில் தான் திமுக தலைவர்களும் தொண்டர்களும் இன்றும் உழைக்கிறார்கள். ஆனால் விஜய் அவர்களே! உங்கள் ரசிகர்கள் தங்களின் 30 ஆண்டு கால திரைப்பயணம் 2 ஆண்டு கால அரசியல் பயணத்தில் உங்களிடமிருந்து கற்றுக்கொண்ட புகை பிடித்தல், 24 மணி நேரமும் போதையிலிருப்பது, பாலியல் சீண்டல்கள், கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் தயாரித்து விற்பதால் தமிழ்நாடு கடந்த 6 மாதமாக #குட்டிச்சுவராகி வருவது உங்களுக்குத் தெரியவில்லையா CM Sir?

தற்போது மாநில அரசின் உரிமைகளான #கல்வி, #கனிமவளம், #மீன்பிடிக்கும் உரிமைகள் மற்றும் GST வரி விதிப்பு ஆகியவற்றை தொடர்ந்து ஒன்றிய அரசு பறித்து வருவதை தடுக்கத்தான் "குரியன் ஜோசப்" தலைமையில் குழு அமைத்து அதன் 10 பரிந்துரைகள் கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வர் #முகஸ்டாலினிடம் சமர்ப்பித்தது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத்தான் என்பதை படித்து புரிந்துகொள்ள முடியவில்லையா CM Sir?

இதுபோல் தமிழ்நாடுட்டிற்கு விரோதமான உத்தரவுகளெல்லாம் உங்கள் "ஆந்திர ரெட்டி கேங்-கோடு" சேர்ந்து நள்ளிரவில் தான் முடிவெடுக்கப்படுவதாக சொல்லப்படுவது உண்மையா CM Sir?

உண்மையென்றால் "நள்ளிரவு உத்தரவுகளை" இத்தோடு நிறுத்திவிட்டு பகல்பொழுதில் கோட்டையில் அமர்ந்து நல் ஆலோசனைகளைப் பெற்று தமிழ்நாட்டு மக்கள் படும் துன்பங்களான பாலியல் சீண்டல்கள்,கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் தயாரித்து விற்பது,கொலை,கொள்ளை,சிறுவர்- சிறுமியர் கடத்தல்,மீனவர் உரிமைகளை பறிகொடுத்தல்,கடுமையான விலைவாசி உயர்வு,மின்கட்டண உயர்வு,பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் உங்கள் அரசையும்,தொண்டர்களையும் தடுத்து நிறுத்திட எப்போது வருவீர்கள் CM Sir?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 Reddy Gang's Midnight Plot: Appavu Accuses CM Vijay of Anti-Tamil Decisions
``காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லை", "CM விஜய் வாய் திறக்கப்போவதில்லை..." ஒரே நாளில் 11 கொலைகள்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.