

"கழகத்தின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம். கடுமையானதாகத்தான் இருக்கும்; சிலருக்குக் கசப்பானதாகவும் இருக்கும்." என செயற்குழு கூட்டத்தில் பேசினார் மு.க.ஸ்டாலின்.
இந்த மாறுதல்கள் அதிக கசப்பாக இருப்பது இந்த 13 பேருக்குத்தான்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியை மறுசீரமைக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக பல்வேறு பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிளைச் செயலாளருக்கு 45 என்றும், பேரூர், நகர, ஒன்றிய செயலாளர்களுக்கு 60 என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இத்துடன் கட்சி அமைப்பில் அதிகாரமிக்க பதவியாக இருக்கும் மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 என வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வயது வரம்பால் கட்சியில் மூத்த, அதிகாரமிக்க தலைவர்களாக இருந்த சிலரும் முன்னாள் அமைச்சர்களும் பதவிகளை இழக்கின்றனர்.
பதவி இழக்கும் 13 மாவட்ட செயலாளர்கள்:
1) க. சுந்தர்- காஞ்சிபுரம் தெற்கு- வயது 72
2) ஆர். காந்தி- இராணிப்பேட்டை- வயது 80
3) எ. வ. வேலு- திருவண்ணாமலை தெற்கு- வயது 75
4) செஞ்சி மஸ்தான்-விழுப்புரம் வடக்கு- வயது 71
5) எஸ்.ஆர். சிவலிங்கம்- சேலம் கிழக்கு- வயது 75
6) சு. முத்துசாமி- ஈரோடு தெற்கு- வயது 77
7) சாக்கோட்டை க. அன்பழகன்- தஞ்சாவூர் வடக்குவயது 72
8) ரகுபதி- புதுக்கோட்டை தெற்கு- வயது 76
9) கோ. தளபதி- மதுரை மாநகர்- வயது 70
10) நா. இராமகிருஷ்ணன்- தேனி தெற்கு- வயது 77
11) கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்- வயது 77
12) அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்-தூத்துக்குடி தெற்கு- வயது 74
13) இரா. ஆவுடையப்பன்- திருநெல்வேலி மேற்கு- வயது-81
இந்த அறிவிப்புடன் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பல புதிய முகங்கள் மாவட்ட செயலாளர் பதவியை அலங்கரிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.